top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-166 - தலைமை இல்லாவிட்டால்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-166

தலைமை இல்லாவிட்டால்?


  • ஒருபெரிய இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எண்ணற்ற இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியை, எல்லாக் கலைஞர்களும் தங்களுக்குள் தாங்களே நிர்வகித்துக்கொள்ள முற்படுகிறார்கள். இசை நிகழ்ச்சி துவங்கியதும், முதல் பாடலிலேயே குழப்பம் துவங்குகிறது. ஒவ்வொரு இசைக்கருவியும் துவங்கும் நேரமும், முடியும் நேரமும் சரியாண கோர்வையில் வராததால், பாட்டின் இனிமை குன்றியது. அடுத்தடுத்து வந்த பாடல்களிலும் குழப்பங்கள் அதிகரித்தன. ஏன் இந்த குழப்பம்? இப்படித்தான் இசை தயாராகிறதா?

  • ஒரு பெரிய கட்டிடம் கட்ட வேண்டுமென்று திட்டம் வகுக்கிறார்கள். கட்டிடத்தில் எத்தனை அறைகள், அரங்குகள் இருக்கவேண்டுமென்று தேவைகுறித்து பட்டியல் முடிவாகிவிட்டது. அந்த கட்டிட திட்டத்தை முழுமையாய் செயல்படுத்தி முடிக்க, பல்வேறு பட்ட வல்லுனர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அந்த கட்டிடம் கட்டுவதற்கு ஒரு குழுவை அமைத்து ஒருங்கிணைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும், இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? என்ற கேள்வி வரும்போது, யார் இறுதி முடிவெடுப்பார்கள்?

ஒவ்வொரு இசை குழுவிற்கும் இசை அமைப்பாளர் இருப்பார். ஏற்கனவே அமைக்கப்பட்ட இசையென்றால், அந்த குழுவிற்கென்று ஒரு மேலாளர் இருப்பார். குழுவில் யார் இடம்பெற வேண்டும், எந்த இசைக்கருவி எப்போது துவங்கவேண்டுமென்று அவர் முடிவெடுப்பார். அவரது வழிநடத்தலில் நடக்கின்ற நிகழ்ச்சி, ஒரு கோர்வையாக நடந்தேறும். இப்படி ஒரு தலைமை இல்லாமல் இசைக் குழு செயல்பட நினைத்தால், ஒருங்கிணைப்பில் பல குழப்பங்கள் ஏற்படும். தலைமை இல்லாமல் பெரிய இசைக்குழு அல்லது எந்தவொரு கலைக்குழுவும் சிறப்புற செயல்படுவது சாத்தியமில்லை.


தலைவர் ஒருவர் இருந்தால், சிக்கலான தருணங்களில் அந்த தலைவரின் முடிவை ஏற்று எல்லோரும் செயல்படுவார்கள். தலைவர் இல்லாமல், குழு உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்டிடத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து தன்னிச்சையாக இறுதி முடிவெடுத்து செயல்பட்டால், கட்டிடம் சாய்ந்த பைசா கோபுரமானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


மூன்று-நான்கு பேர் சேர்ந்து செய்துமுடிக்கவேண்டிய எந்தவொரு வேலைக்கும், யாரேனுமொருவர் பொறுப்பேற்று, திட்டங்களை வகுத்து குழுவை வழிநடத்தினால் மட்டுமே, அந்த செயல் எதிர்பார்த்த விதத்தில் செய்து முடிக்க முடியும். எவ்வளவுதான் குழுவினருக்குள் நல்ல ஒற்றுமை இருந்தாலும், செய்கின்ற செயலை அவர்களுக்குள் ஒருவர் பொறுப்பேற்று நிர்வகிக்கத் தவறினால், குழுவின் செயல்பாட்டில் அவ்வப்போது வரும் குழப்பங்களை தீர்க்க முடியாது.


நடைமுறையில் ஒரு செயலை தனித்து செய்வதைக் காட்டிலும் ஒரு குழுவின் செயல்பாட்டை நிர்வகிப்பது மிகவும் சிக்கலான செயல். அதிலும் குழு உறுப்பினர்களுக்குள் சில பினக்குகளும், போட்டி-பொறாமைகளும் இருக்கும்பட்சத்தில், அவர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் பெரிதாய் ஏதும் வராமல் செயல்களை செய்து முடிக்கவைப்பது கடினமான வேலைதான்.


ஒரு அதிகாரியாக, தன் கீழுள்ள ஊழியர்களுக்கு தலைவனாக வேலை வாங்குவதற்கும், எல்லோரும் சமமானவர்களாக உள்ள குழுவிற்கு தலைமையேற்று செயல்களை முடிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதிகாரியாக, அனைவரும் அவரின் உத்தரவுகளுக்கு கீழ்படிவார்கள். ஆனால், சக ஊழியர்களின் தலைவனாக இருக்கும்போது, அவர்களிடம் அளவிற்கு அதிகமாக அதிகாரம் செலுத்த முடியாது. இதை செய் என்று பணிப்பது கடினம். ஒரு தலைவனாக, தன் பேச்சுத்திறமையில் அவர்களை வழிநடத்திட வேண்டும்.


தலைமை இல்லாமல் குழு செயல்பட்டால்,

  • இலக்கில்லாமல் குழுபயனிக்கின்ற நிலைக்கு தள்ளப்படும்

  • பல்வேறுபட்ட உறுப்பனர்களை ஒருங்கிணைப்பது சாத்தியமற்றுப்போகும்;

  • யார் பேச்சை யார் கேட்பதென்ற தேவையற்ற அகங்காரமும், வீண்விவாதங்களும் பெரிதாகும்;

  • ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதும் அதிகரிக்கும்;

அதேசமயம் தவறானவர்கள் தலைமை ஏற்றால்

  • குழுவின் பொது ஆதாயத்திற்கு பதிலாய், தனிமனித ஆதாயத்திற்காக உழைப்பார்கள்;

  • அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதற்கு பதிலாய் தொண்டர் படையை, அடிமைகளை உருவாக்குவதில் குறியாய் இருப்பார்கள்

சிறிய விடயங்களைச் செய்ய தனிமனிதானாய் நின்று செய்துவிடலாம். பெரிய காரியங்களை சாதிக்க, பலபேர் சேர்ந்து உழைக்க வேண்டும். அப்படி பலபேர் சேருமிடத்தில் அவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைப்பது அடுத்த மிகப்பெரிய வேலை. குழுவிற்குள் ஒருவர் தலைமை ஏற்று, எல்லாரையும் ஒருங்கிணைத்தால், எண்ணிய வெற்றியை எளிதில் அடையாலம்;


பெரிய வெற்றிகளுக்கு

பெரிய குழுக்கள் தேவை;

பெரிய குழுக்களுக்கு

தலைமை மிக முக்கியம்;

தலைமை இல்லாத குழு

திசை தெரியாமல் பயனித்து மடியும்;


தலைமை

இலக்குகளையும், செயல்களையும் ஒருங்கிணைத்து

எண்ணிய எண்ணியாங்கெய்திட வழிவகுக்கும்;


- [ம.சு.கு 24.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page