top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-153 - குருட்டு நம்பிக்கை கைகொடுக்காது!"

Updated: Mar 12, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-153

குருட்டு நம்பிக்கை கைகொடுக்காது!


  • 2009-ஆம் ஆண்டு, நியூயார்க் நகர விமான நிலையத்திலிருந்து கிளம்பிய அமெரிக்க விமானம், 2 நிமிடங்களில் பறவைகள் மோதியதில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு ஹட்சன் நதியில் தரையிரக்கப்பட்டது. வானூர்தி வரலாற்றில், புத்தகங்களில் மட்டும் பேசப்பட்டு வந்த நீரில் தரையிறங்கும் அவசரகால தற்காப்புமுறை, மிகுந்த சிரமங்களுக்கிடையே கட்சிதமாக நிகழ்த்தப்பட்டு, 155 பயனிகளும், சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஒருசாரார் விமானியின் தைரியத்தை பாராட்டினர். இன்னொருசாரார் அருகில் இருந்த விமான நிலையத்தில் தரையிரக்க முயற்சிப்பதை விட்டு, விமானி குருட்டு நம்பிக்கையில் பயனியர் உயிருடன் விளையாடிவிட்டார் என்று குறை கூறினர். அந்த விமானியின் முடிவு சரியா?

  • தரையில் இருந்து கொண்டே யோசித்தால் நீச்சல் கற்கமுடியாது, தண்ணீரில் குதித்தால் தான் கற்கமுடியும் என்பது எல்லோரும் அறிந்ததே. கிராமங்களில், ஒரு சில சமயங்களில் புதிதாக நீச்சல் கற்கவரும் சிறார்கள், பயந்து நிற்கும்போது திடீரென்று கிணற்றுக்குள் தள்ளிவிட்டுவிடவார்கள். சக மாணவர்கள், பெரியவர்களின் குருட்டு நம்பிக்கையில் இப்படிப்பட்ட விபரீத முயற்சிகள் ஆங்காங்கே நடக்கிறது. எப்படியும் உடனிருப்பவர்கள் கிணற்றுக்குள் கவனித்துக்கொள்வார்கள் என்று இப்படி தள்ளிவிட்டு விடுவார்கள். இப்படி செய்தால்தான் எளிதில் கற்பார்கள் என்ற குருட்டுநம்பிக்கையில் நீருக்குள் தள்ளி மற்றவரை பயத்தில் ஆழ்த்துவது சரியா?

ஆற்றில் தரையிரக்கிய சாகச விமானி திரு. சல்லி மிகவும் அனுபவம் வாய்ந்தவர். ஆனால் நீரில் தரையிறக்கிய அனுபவம் ஏதுமில்லை. இயந்திரம் செயலிழந்த அந்த நொடியில், இருக்கின்ற எல்லா வாய்ப்புக்களிலும் ஆபத்து குறைவான வழிமுறை எதுவென்று 10-15 நொடிகளுக்குள் சிந்தித்து முடிவெடுத்து, ஒரு குருட்டு தைரியத்தில் முயற்சித்து வெற்றிகண்டார். பின்னாளில் வந்த ஆய்வறிக்கைகள் அவரது முடிவு சரியானதென்று சான்றளித்து வீரப்பதக்கங்களை வழங்கியது. விமானம் நீரில் இறக்கியதால் முற்றிலும் பயனற்றுப்போனதும், பயனிகளுக்கான இழப்பீடும் நிறுவனத்திற்கு மிக்பெரிய நஷ்டம் தான். ஒருவேளை விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியிருந்தால் நஷ்டம் குறைந்திருக்கலாம். அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் அவரது குருட்டு தைரியம் 155 உயிர்களை காப்பாற்றியது. ஒருவேளை விமானம் வெடித்திருந்தால்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை!!


நீச்சல் கற்க தண்ணீரில் இறங்கித்தான் ஆகவேண்டும். ஆரம்பத்தில் சற்றே தயங்கினாலும், அவர்களாக இறங்கி முயற்சித்தால் பயம்படிப்படியாக விலகி கற்றுத்தேறலாம். மற்றவர்களின் கட்டாயத்தினால் தள்ளப்படும்போது அந்த சிறார்களுக்கு நீரின் மீதான பயம் அதீதமாகிவிடுகிறது. 30 ஆண்டுகளுக்கு முன், ஒரு கிராமத்தில் அப்படி கிணற்றுக்கள் தள்ளப்பட்ட சிறுவன் பத்திரமாக கரைசேர்க்கப்பட்டாலும், தள்ளப்பட்ட பயத்தில் புத்திபேதலித்தது சரியாக கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆனது. முறையான பாதுகாப்பு சட்டையுடன் நீச்சல் கற்க ஆரம்பித்து சிறந்த நீச்சல் வீரர்கள் உருவாகும்போது, ஏனோ இன்னும் இந்த குருட்டுத்தனமான விளையாட்டுக்கள் தண்ணீரின் அபாயமறியாமல் உயிர்பலி வாங்குகிறது!


அப்போதைக்கு, நம் மனதில் தோன்றியதை / நம் மனதிற்கு சரியென்று பட்டதை, விளாவாரியாக ஆராய்ந்து பார்க்காமல், இது சரியாக இருக்குமென்ற ஒரு நம்பிக்கையில் செயல்படுத்த முயற்சிப்பது “குருட்டு நம்பிக்கை” [ஆங்கிலத்தில் – “கட் ஃபீலிங்”].

ஏன் அப்படி குருட்டு நம்பிக்கையில் முடிவெடுத்து களமிறங்குகிறார்கள்?

  • அடுத்து என்ன செய்வதென்று தெரியாதபோது, வருவதை செய்வோம் என்று களமிறங்குகிறார்கள்;

  • தன் பலத்தின் மீதான நம்பிக்கையை விட, அதிர்ஷ்டத்தின்மேல் நம்பிக்கை வைத்து குருட்டுத்தனமாக களமிறங்குகிறார்கள்;

  • அவர்களின் முந்தைய முயற்சிகள் / அனுபவங்கள், வெற்றிபெற்றதன் தைரியத்தில், இம்முறையும் முயற்சிக்கலாம் என்று களமிறங்குகிறார்கள்;

  • மற்றவர்கள் கூறிய அனுபவங்களை, அறிவுரைகளை சூழ்நிலைகளுக்கேற்ப ஆராயாமல் அப்படியே நம்பி களமிறங்குகிறார்கள்;

  • சிலசமயம், கூட்டத்திலிருந்து தனித்து செயல்பட வேண்டுமென்ற எண்ணத்தில், இயல்பிலிருந்து மாறுபட்ட முயற்சியில் களமிறங்கிறார்கள்;

  • அவர்களுக்கு தோன்றிய எண்ணங்கள் சரியென்று நிரூபிப்பதற்கான சில ஆதாரங்களை தேடி, தங்களை நியாயப்படுத்திக்கொண்டு களமிறங்குகிறார்கள் [யதார்த்தத்தில் அதற்கு எதிரான நிறைய ஆதாரங்கள் இருக்கலாம், ஆனால் அவற்றை வேண்டுமென்றே கவனிக்காமல் புறந்தள்ளிவிடுகிறார்கள்];

இப்படி குரட்டுத்தனமாக முடிவெடுத்து களம் காண்பதின் சாதக-பாதகங்கள் என்ன என்று அலசிப்பார்போம்;

  • அவசர காலத்திற்கு முடிவுகள் சீக்கிரமாக எடுக்கப்படும், அதேசமயம் தீர ஆலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் தோல்விகான வாய்ப்பு அதிகம்;

  • தன்னம்பிக்கை அதிகரித்து தனிமனித வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஒருவேளை முயற்சி தவறானால், தன்னம்பிக்கை பாதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது;

  • குருட்டுத்தனமான முயற்சி வெற்றிபெற்றால் யாரும் ஏதுவும் சொல்லமாட்டார்கள். மாறாக தோற்று நஷ்டம் ஏற்பட்டால், போதுமான அளவு திட்டித் தீர்ப்பார்கள்;

அவசரத்தில் எடுக்கப்படும் முயற்சிகள் எல்லாமே குருட்டுத்தனமானதாகிவிடாது. உத; விமானி ஆற்றில் தரையிரக்கியது அப்போதைக்கு குருட்டுத்தனமான முடிவென்று சொன்னாலும், நன்கு அனுபவப்பட்ட விமானி, அப்போதைய விமானத்தின் இயந்திர கோளாறு சூழ்நிலை, விமானத்தை திருப்பிவந்து விமான நிலையத்தில் தரையிறக்க எடுக்கும் காலநேரம், முடிவெடுக்க இருக்கும் குறுகிய காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால், அந்த நீரிலிறக்கும் முயற்சியும் சிறந்த முடிவே.


எந்த சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்தே உங்கள் செயல்பாடு சரியா? தவறா? என்று சொல்ல முடியும். பிறருடன் ஆலோசித்து செய்ய போதுமான நேரம் இருக்கும் இடத்தில், தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துவிட்டு கடைசி நிமிடத்தில் அவசரகதியில் முடிவெடுத்தால், அது முட்டாள்தனமான செயல்தான். அதே சமயம் யாருமே இல்லாத காட்டுப்பகுதியில், உயிருக்கு போராடும் ஓரு நபருக்கு உங்களுக்கு தெரிந்த முதலுதவி செய்ய முயற்சிப்பது குருட்டு முயற்சியானாலும், வேறு வழியில்லாத இடத்தில் அந்த முயற்சி தவறன்று. எந்த சூழ்நிலையில் நீங்கள் முடிவெடுக்கிறீர்கள் என்பதை பொருத்துத்தான் உங்களினு குருட்டு முயற்சி ஏற்புடையதா? தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியதா? என்று சொல்ல முடியும். சூழ்நிலை எதுவானாலும், குருட்டு நம்பிக்கையில் களம் காண்டால், வெற்றிக்கான வாய்ப்பு 50%-ற்கும் குறைவுதான்.


தான் நினைத்தது சரியாக இருக்கும் என்று

குருட்டுத்தனமாக எண்ணிக்கொண்டு

அளவிற்கு அதிகமாக பயனம் செய்தால்

தோல்விக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்;


பல சமயம் உங்கள் உள்ளுணர்வுகள் சரியாக இருந்திருக்கலாம்;

ஆனால் எப்போதும் சரியாக இருக்குமென்று எப்படி எதிர்பார்க்க முடியும்;

ஏதாவதொரு சமயம் உள்ளுணர்வு தவறாகி

எல்லாவற்றையும் இழந்து நின்றால், பின் எப்படி மீளவது?


குருட்டு நம்பிக்கை அளவோடு இருக்கட்டும்;

பயனத்தின் பாதையை தொடர்ந்து அலசிப்பாருங்கள்;

ஒரு தலைபட்சமாக நீங்கள் மட்டுமே சரியென்று எண்ணிவிடாதீர்கள்;



- [ம.சு.கு 11.03.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Post: Blog2 Post
bottom of page