“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-151
முதல் தேர்வு சிரிவராவிட்டால்?
முதல் முறையாக மத்திய ஆட்சிப்பணித் தேர்வில் பங்கெடுத்துக் கொள்கிறீர்கள். சிறுவயது கனவாக அது இருந்தாலும், அதிக நேரம் செலவிட்டு படித்துருந்தாலும், முதல் முறையில் அதன் போக்கு தெரியாததன் காரணத்தினால், தோல்வியுற நேரலாம். அப்படி முதல் தேர்வில் தோல்வியுறுவது நிரந்தர முடிவா? அதை நிரந்தர மாக்குவுதும், அல்லது தொடர்ந்து முயற்சித்து வெற்றிகாண்பதும் யார் கையில் இருக்கிறது?
·நீங்கள் உங்கள் மனைவியுடன் முதல் முறையாக சுற்றுலா செல்கிறீர்கள். அந்த பயனத்தில் சிலமுன்னேற்பாடுகளை கவனிக்கத்த தவறிவிடுகிறீர்கள். அதனால், கடைசி நிமிடத்தில் சில தங்கும் விடுதிகளில், உங்களுக்கு அறை கிடைப்பது மிகவும் தாமதமாகிறது. அந்த சுற்றுலா அவ்வளவு சிறப்பாக போகவில்லை. முதல் முறையாக சென்ற சுற்றுலா சரிவரி இருக்கவில்லை என்று, இனிமேல் சுற்றுலா செல்வதையே திவர்த்துவிடுவீர்கள1?
வருடாவருடம் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் தேசிய ஆட்சிப்பணி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். அவர்களில் ¼% நபர்களுக்கும் குறைவானவர்களே இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்கானலிலும் வெற்றி பெறுகின்றனர். அப்படி வெற்றிபெறுபவர்களில் 1-2 பேரைத்தவிற மற்றவர்கள் எல்லோரும் 3-4 வது முறையில் தான் அதை வென்றிருக்கார்கள். அவர்கள் முதல் முயற்சியில் தோற்றவுடன் இது ஒத்துவராது என்று விட்டு விலகியிருந்தால், பின்னர் தேர்வாகும் வாய்ப்பை இழந்திருப்பீர்கள். முதல் முறை முயற்சி தவறியிருக்கலாம். ஆனால் அந்து தவறான முயற்சி மட்டுமே இறுதியானதுதல்ல!
எங்காவது வெளியூர் சென்று விடுமுறையை கழிப்பதில் சற்று தாமதங்களும் அசௌகர்யங்களும் ஏற்பட்டு விடுகிறது. அதற்காக இனிமேல் இருக்கின்ற ஊரைவிட்டு வெளியே வரவே மாட்டேன் என்று கூறிவிட முடியமா? முதல் முறையில் நீங்கள் சரியாக திட்டமிடாமல் இருந்திருக்கலாம். அல்லது உங்கள் திட்டப்படி விமானங்களின் வரவு சற்று தாமதப்பட்டிருக்கலாம். அதனால் உங்களின் பயனத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, வந்த இடத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க முடியாமல் போகலாம். தவறு உங்களுடையதாக இருக்கலாம் (அல்லது) மற்றவருடையதாக இருக்கலாம். அந்த தவறுகளையும். குழப்பங்களையும் கண்டு அஞ்சி, இனிமேல் ஒன்றும் செய்யமாட்டேன் என்று அதைவிட்டு விலகிநிற்பதால் யாருக்கு நஷ்டம்?
துணிந்து முடிவெடுக்க வேண்டும். முடிவுகளில் சிலசமயம் தவறுவரலாம். அவை நிரந்தரமல்ல. தவறுகளை திருத்திக்கொண்டு அப்படியே முன்னேறலாம். ஒரு வேளை நீங்கள் எடுத்த முடிவு முற்றிலுமே தவறாகியிருந்தால், அதை விட்டுவிட்டு புதிய முடவை எடுத்து முன்னேற முயற்சிக்க வேண்டியதுதான். நடந்த தவறுகளையே கிளரிக்கொண்டிரிந்தால், வேதனைக்ள அதிரித்து உற்பத்தி குறையும். முதல் முடிவு தவறானால், அடுத்தடுத்த முடிவுகளைசீக்கிரத்தில் எடுத்து செயல்படுத்து வெற்றிகாண வேண்டும். தவறுகள் நிகழ்வது மனித இயல்பு.
பலவிடயங்களில், தோல்விகள் பெரிதுபடுத்தப்படலாம், ஒருசிலவற்றில் யாரும் அதைப்பற்றி கவலைப்படாமல் இருக்கலாம். மற்றவர்கள் என்ன சொல்வார்கள், என்ன நினைப்பார்கள், என்பதைப்பற்றி கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. சரியோ-தவறோ! நீங்கள் ஒருமுடிவெடுத்து முன்னேற வேண்டியதுதான். அந்த பாதையில் தவறு நேர்ந்தால், திரும்பவும் ஆரம்பத்திலிருந்து துவக்கி வெற்றிகாண வேண்டியதுதான். ஒரு தோல்வி முடிவாகிவிடாதென்பது நீங்கள் அறிந்ததுதான். அதை நிரந்தர முடிவாக்காமல் அடுத்த முயற்சியில் வெற்றிகாண்பது உங்கள் கையில்.
ஒருமுடிவை எடுத்து முன்னேறும் போது, அவற்றை ஆரம்பத்தில் சோதனைமுறையில் செயல்படுத்திப் பார்க்கவேண்டும். முதல் முறை முயற்சிக்கும் போது, நம் கட்டுப்பாடுகளை மீறி தவறுகள் நேரலாம். அந்த தவறுகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடாத வண்ணம் கவனத்துடன் இருந்தால் நமக்கு நல்லது. எடுக்கப்பட்ட முடிவில் தவறிருக்கிறதென்றால், அதை அறிந்தவுடன் மாற்றி சரிசெய்ய வேண்டும். ஒரு வேளை செய்த அளவோடு அப்படியே விட்டுவிட்டு விலகுவது நல்லதென்றால், அந்த முடிவை எடுப்பதற்கும் நல்ல நேரம், நல்ல காலம் பார்த்துக்கொண்டிருக்காமல், சரியான முடிவை கூடியவிரைவில் எடுத்து முன்னேறுங்கள்.
ஒருசில பொருட்கள் சோதித்து ஏற்றுக்கொள்ளப்படும் வரை, அதைச் சார்ந்த மற்ற எல்லா பொருட்களையும் சற்று ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும். உத; ஒரு குறிப்பிட்ட மின்னனு சாதனத்தை வாங்கிவருகிறீர்கள். அது உங்கள் வீட்டில் சரிவர பொருத்த முடியவில்லை. கடைக்கு கொண்டு சென்று சரியான அளவிற்கு மாற்றிக்கொள்ள வேண்டுமானால், அந்தப் பொருளை அந்தக் கடையில் வாங்கியமதற்கான இரசீதை பத்திரமாக வைக்க வேண்டும். அதை கிழித்து வீசியிருந்தால், எப்படி மாற்றுவது? மின்னனு சாதனம் என்று மட்டும் இல்லாமல், உடைகள், மளிகைப்பொருட்கள், மருந்துகள் என்று எதுவானாலும், வாங்கிய இரசீது பத்திரமாக இருந்தால், மாற்றிக்கொள்வதற்கு, உத்திரவாத காலத்தில் பழுதுபார்ப்பதற்கும் வசதியாக இருக்கும். இரசீதைத் தொலைத்தால், பின் ஒன்றும் செய்ய முடியாது.
சிலவற்றை முற்றிலுமாய் மாற்றவும் முடியாது / ஒதுக்கவும் முடியாது. சில இன்னல்களுக்கு இடையே வாழ்ந்துதான் ஆகவேண்டும். உத;உங்கள் பிள்ளை சரியாக இல்லையென்றால், நீங்கள் பிள்ளையை மாற்ற முடியாது. மாறாய், பிள்ளைக்கு நல்லறிவு புகட்டி திருத்த மட்டுமே முடியும். அதுவும் முடியாவிட்டால் விதிதான்.
உங்களின் முடிவுகளில் தவறுநேரலாம்;
அது இரண்டாவது முறை நேராமலிருப்பது முக்கியம்;
பிறர் சொல்வதை கவனித்து நடப்பதானால்
உங்கள் கற்றலின் வேகம் குறைந்துவிடும்;
நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்வதைப்போல
சிலவற்றை பட்டுத் தான் உணர முடியம்;
பட்டுத் தெரிந்துகொள்ள பயப்பட்டால்,
குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான்!
- [ம.சு.கு 09.03.2023]
Hozzászólások