top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-142 - எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ளுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-142

எதிர்பார்ப்புக்களை குறைத்துக்கொள்ளுங்கள்!


  • இன்று பல சிறிய நிறுவனங்கள், வேலைக்கு சரியான ஆள்கிடைக்காமல் சிரமப்படுகின்றன. சிறுநிறுவனங்களில் ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டிய தேவையிருக்கும். வேலைக்கு வருபவர்ளிடம் அந்த வேலைக்கான சுட்டிப்பு இருப்பதில்லை என்பது நிறுவனங்களின் பொதுவான கருத்தாக இருக்கிறது. தான் செய்யும் வேலை எளிதாகவும், மதிப்பிற்குரியதாவும், அதிக சம்பளம் கிடைப்பதுவுமாக இருக்க வேண்டுமென்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தன் ஊழியர்கள் எல் என்றால் எண்ணெயாக நிற்கின்ற அளவிற்கு திறமைசாலிகளாக இருக்க வேண்டுமென்று நிறுவனம் எதிர்பார்க்கின்றது. இவர்கள் இருவரின் எதிர்பார்ப்புக்கள் எவ்வளவு தூரம் சாத்தியப்படும்;

  • இன்றைய காலகட்டத்தில், பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்திற்கு இணையாக காதல் திருமணங்களும் நடந்தேறிவருகின்றன. அது மகிழ்ச்சிக்குரிய விடயமாக இருந்தாலும், மேல்நாடுகளைப்போல விவாகரத்துக்களும் அதிகரித்து வருவது வேதனைக்குறிய விடயமே. அதிலும் காதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவிகிதம் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களைவிட ஒருமடங்கு கூடுதலாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் சொல்வது மேலும் அச்சத்தை அதிகரிக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணமோ, காதல் திருமணமோ, ஏன் இந்த கருத்தொற்றுமையின்மையும், விவாகரத்துக்களும் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

ஊழியர்கள் எந்த அளவிற்கு திறமைசாலிகளாக இருக்கவேண்டுமென்று நிறுவனங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் உண்டு. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஊதியத்தை நிறுவனங்கள் தரத்தயாராக இருப்பதில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் சாமர்த்தியசாலிகள் சந்தையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப இந்த நிறுவனங்களின் பணிச்சூழல் இல்லை. இன்று ஊதியத்தைத் தாண்டி, வேலை செய்யும் இடம், மேலாளர்-சகபணியாளரின் அனுகுமுறை என்று எண்ணற்ற எதிர்பார்ப்புக்கள் ஊழியர்களிடம் இருக்கிறது. நிறுவனம் எதிர்பார்ப்புக்களை அதிகரித்தால், அதற்கு நிகராக ஊழியர்களின் எதிர்பார்ப்புக்களும் அதிகரிக்கிறது. சில நிறுவனங்கள், சராசரியானவர்கள் போதுமென்று சராசரி மனிதர்களை எடுத்து பயிற்ச்சி அளித்து நிறுவனத்தை நடத்துகிறது;


இல்லற வாழ்வில், அதீத எதிர்பார்ப்புக்களுடன் நிகழும் பல காதல் திருமணங்களின் சாயம் சீக்கிரத்தில் வெளுத்துப் போகிறது. நான் இப்படித்தான் இருப்பேன் – ஆனால் நீ இப்படி இருக்கு வேண்டுமென்று எதிர்பார்ப்புக்கள் எக்கச்சக்கமாய் துணையிடம் திணிக்கப்படும்போது. விவாகரத்துக்கள் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிடுகிறது. பெரியவர்கள் நிச்சயித்த திருமண பந்தத்திலும் இந்த பிரச்சனை அவ்வப்போது தலைதூக்கினாலும், பெற்றோர்கள் யதார்த்தத்தை சொல்லிக்கொடுத்து எதிர்பார்ப்புக்களை கட்டுப்படுத்துகின்றனர்.


உங்கள் எதிர்பார்ப்புக்கள் அளவிற்கு அதிகமாக இருந்தால்

  • அதிகப்படியான எதிர்பார்ப்புக்கள் இருக்குமிடத்தில், அவ்வப்போது பெரிய ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பதிகம்;

  • அதீத எதிர்பார்ப்புக்கள் புரிந்து கொள்ளப்படாமல் போகும்போது, குடும்ப உறவுகள் பெரிதும் பாதிப்படைகின்றன;

  • இன்றைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத சிலவற்றை எதிர்பார்த்திருப்பது முட்டாள்தனமானது. அவற்றை கனவுகண்டு நேரத்தை வீண்டிப்பதில் பயனில்லை;

  • நிறைய சாதிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பில், குடும்பத்திற்குரிய நேரத்தையும், உங்களை புதுப்பித்துக்கொள்வதற்குரிய நேரத்தையும் ஒதுக்க தவறினால், தனிமனிதனாக சீக்கிரத்தில் தோல்வியை சந்திக்க நேரிடும்;

உங்கள் எதிர்பார்ப்புக்கள் அளவுடன் இருந்தால்

  • தேவையற்ற மனஅழுத்தமும், மன உளைச்சலும் இருக்காது;

  • கையில் இப்போதைக்கு இருப்பவற்றைக்கொண்டு மகிழ்ச்சிகாண முடியும்;

  • வாழ்க்கைத் துணை இதையெல்லாம் தனக்கு செய்யவேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் இயல்பாக வாழும்போது வாழ்க்கை இன்பமயமாக இருக்கும்;

  • வாழ்க்கைப் பயனத்தில் வரும் ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் பெரிதாய் பாதிக்காமல் கடந்துசெல்ல மனம் தயாராக இருக்கும்;

  • கால நேரத்திற்கு ஏற்ப எதிர்பார்ப்புக்கள் குறைவாக இருக்கும்போது வளர்ச்சியை நோக்கிய பாதையில் எளிதாக மனநிறைவடைவதுடன், அடையவேண்டிய இலக்குகளையும் சிறுசிறு பகுதிகளாக எளிமையாக்கி, பொறுமையாகவும், நிம்மதியாகவும் சென்றடையலாம்;

எதிர்பார்ப்புக்கள் குறைவாக இருந்தால் மனஅழுத்தம் குறைவு என்பது உண்மையாக இருந்தாலும், எல்லா சமயத்திலும், எல்லாவற்றிலும் எதிர்பார்ப்புக்களை குறைத்தால், நிறுவனத்தின் உற்பத்தி குறைந்து, தரமும் குறைந்து போகும். பெரிய எதிர்பார்ப்புக்கள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் போராடுவதற்கான உத்வேகம் இல்லாமல், சாதாரண மனிதனாக பயனிக்க நேரிடும்.


எதிர்பார்ப்புக்கள் வேண்டும். அது உங்களை தினம் தினம் காரணத்தோடு வெற்றியை நோக்கி ஒடவைக்கும். அதேசமயம் அதீத மனஅழுத்தத்தையும், மனித உறவுகளையும் பாதிக்கின்ற அளவிற்கு எதிர்பார்ப்புக்களை வளர்த்துக்கொள்ளாதீர்கள்.


உங்களின் எதிர்பார்ப்புக்களுக்கேற்ப

எல்லாமே 100% கச்சிதம் இருக்கவேண்டுமென்றால்

அப்படிப்பட்டதொரு நிலை மரணத்தில் மட்டுமே உண்டு;


நடைமுறையி்ல் நிறைய எதிர்பார்ப்புக்கள்

ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்;


சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கும்,

மனிதர்களின் திறமைகளுக்கும் ஏற்ப

உங்கள் எதிர்பார்ப்புக்களை அளவாக வைத்துக்கொண்டால்

எண்ணியவையெல்லாம் படிப்படியாக ஈடேறும்;


நீங்கள் அதிபுத்திசாலியாக இருக்கலாம்;

அதேசமயம் உங்கள் ஊழியர்கள் எல்லோரும் புத்திசாலியாக

இருக்கவேண்டுமென்று எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்;

அவர் உங்களைப்போல புத்திசாலியாக இருந்தால்

எப்போதோ உங்களுக்கு எதிராக கடைதிறந்திருப்பார்;


அவரவர்களின் திறமை அளவுகளை புரிந்துகொண்டு

எதிர்பார்ப்புக்களை மாற்றியமைத்து

பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றி வெற்றிகாணுங்கள்;


- [ம.சு.கு 28.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comentários


Post: Blog2 Post
bottom of page