top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-141 - தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-141

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்!


  • 3 மாத குழந்தை குப்புற விழுக தொடர்ந்து முயற்சிக்கிறது. பலநூறு முயற்சிகளில் ஒருநாள் குப்புற விழவே, குடும்பத்தினர் அதை கொண்டாடி மகிழ்கின்றனர். அடுத்த 3 மாதத்தில் உட்கார முயற்சிக்கிறது. சில நூறு முயற்சிகளில் அது சாத்தியமாகிறது. 10-12 மாதத்தில், எழுந்து நிற்கவும், எதையேனும் பிடித்து நடக்கவும் முயற்சிக்கறது. ஒரு நாளைக்கு நூறுமுறைக்கு மேல் முயற்சிக்கிறது. ஓரிரு வாரங்களில் கஷ்டப்பட்டு நடக்கிறது. ஒருமுறை நடந்ததோடு நின்றுவிடாமல் தொடர்ந்து முயற்சித்து நடப்பதை இயல்பாக்கி விடுகிறது. குழந்தையின் முதல் முயற்சியான அழுகையில் வாழ்க்கை தொடங்கி, நடக்கும் முயற்சியில் காலூண்றி, கல்வி-கலைகளில் சிறகடித்துப்பறந்து, தொழில் முயற்சிகளில் உடம்பை வளர்த்து, கற்பித்தலில் விழுதுகள் விட்டு, மூச்சுவிடும் முயற்சியை கைவிடும்போது உயிர்பிரிந்து முற்றுபெறுகிறது.

  • பள்ளியில் பயின்ற நண்பர்கள் இருவரில் ஒருவர் நல்ல பேச்சாளராக வலம்வருகிறார். இன்னொருவருக்கு மேடையென்றால் மிகவும் பயம். ஆரம்பகால பள்ளிப்பருவத்தில், இருவருக்கும் மேடையேற மிகவும் பயமாகத்தான் இருந்தது. அவர்கள் முதல் முயற்சியில் மாணவர்கள் எல்லோரும் கேலி-கிண்டல்கள் செய்தனர். நண்பர்களில் ஒருவன் [முதலாமவன்] மிகவும் பயந்துபோய், இனி எந்தக் காரணத்தைக்குகொண்டும் மேடை ஏறுவதில்லை என்று முடிவெடுத்தான். அடுத்தவன், முதல் முயற்சியில் தோல்வியடைந்தது குறித்து கவலைப்படாமல், அடுத்தடுத்து வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம், தனக்கு தெரிந்த தலைப்பில் பேச ஆரம்பித்தான். போகப்போக கேட்பவரின் தேவைகள் புரிந்தது. அவர்கள் புரிந்து கொள்ளும் அளவும், புரிந்து கொள்ளும் விதமும் அவனுக்கு புரிபடவே, இப்போது மேடைப் பேச்சென்பது, அவனது உயிர் மூச்சாகிவிட்டது.

குழந்தை முதல்முறையாக குப்புற விழுந்தவுடன் குடும்பமே விமரிசையாக கொண்டாடும். சில குடும்பங்களில் அவ்விடத்தில் தேங்காய் உடைத்தும், சில குடும்பங்களில் சிறப்பு பூஜை செய்தும் அந்த குழந்தையின் முதல் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுகின்றனர். ஆம், ஆயிரம் முறை அக்குழந்தை தன் உடலை சுமந்து திருப்பமுயன்று வென்றுள்ளது அப்போதைக்கு அதன் மிகப்பெரிய சாதனை. ஒருமுறை முயன்று நின்றுவிடாமல், முடியாதென்ற வார்த்தைக்கு பொருள்தெரியாமல் குழந்தை தொடர்ந்து முயற்சித்து வெற்றிகாணுகிறது. அதேபோல ஒரு சிறுவன் மிதிவண்டி ஓட்ட பழக ஆரம்பித்தால், எத்தனை முறை காலுண்றுகிறான், விழுகிறான் என்பதைபற்றி கவலைப்படுவதில்லை. அந்த மிதிவண்டி அவன் கட்டுப்பாட்டிற்குள் வரும்வரை தொடர்ந்து போராடுகிறான். இந்த சிறுசிறு சரிவுகள், தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து எத்தனை முறையென்று எண்ணாமல் முயற்சித்த அந்த குழந்தையின் மனநிலை இன்று உங்களிடம் இருக்கிறதா?


பள்ளியில் பாடங்களை படித்து புரிந்துகொள்ளும் முயற்சியில் துவங்கி, விளையாட்டில் வெற்றிபெறும் முயற்சிகள், சகநண்பர்கள் தோழிகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சிகள், அறிவுசார் போட்டிகளில் வெற்றி பெறும் முயற்சிகள் என்று எண்ணற்ற வாய்ப்புக்களும், அதை பயன்படுத்தி வெல்வதற்கான தொடர் முயற்சிகளும் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. எல்லா போட்டிகளிலும் மனம் தளராமல் யார் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறாரோ, அந்த மாணவனால் தனிப்பெறும் சாதனைகளுடன் அசாதாரனமானவனாக வெளிப்பட முடிகிறது. ஏனையவர்கள் ஓரிரு முயற்சிகளில் விலகிவிடுவதால், சாமானியர்களுடன் நிற்கவேண்டிய சாதாரன நிலைதான் இருக்கிறது.


நீங்கள் தொடர்ந்து முயற்சிசெய்யாமல் விலகுபவரானால்

  • உங்கள் கண்முன் இருக்கும் அருமையான வாய்ப்புக்களை நழுவவிடுகிறீர்கள்;

  • இருக்கின்ற நிலையிலே அப்படியே தங்கிப்போவீர்கள், காலமாற்றத்தில் தேவையற்றுப் போகவும் வாய்ப்புண்டு;

  • உங்கள் இலட்சியக் கனவுகள் யாவும் தொடர்ந்து கனவுகளாகவே இருந்து மடியும்;

  • காலம்கடந்த பிறகு, முயற்சி செய்யாமல் விட்டுவிட்டேனே என்று வருந்துவீர்கள்;

ஓரிருமுறை முயன்று தோற்றதற்காக பயந்து விலகினால், எல்லாவற்றையும் கண்டு பயந்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஏனெனில் தோல்வியில்லாமல் வெற்றி சாத்தியமில்லை. ஒரு சிலர், சிறிய தோல்விகளில் பாடம் கற்று பெரியவற்றை கவனத்துடன் செய்கிறார்கள். செயலில் கவனம் அதிகரிக்கும்போது, தவறுகள் குறைந்து வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.


மேலே சொன்னவண்ணம் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருந்தால் சிலசமயங்களில் சிற்சில எதிர்விளைவுகள் தோன்றவும் வாய்ப்புண்டு. சரியான புரிதல் இல்லாமல், நடக்க இயலாததை தொடர்ந்து முயற்சிப்பது, உங்களை சீக்கிரத்தில் சலிப்படையச் செய்து, உங்களின் பொன்னான நேரத்தையும், வளத்தையும் வீணடித்துவிடும்; ஒன்றின் மீதுமட்டும் தொடர்ந்து கவனம் செலுத்தி, மற்ற அத்தியாவசியமானவற்றை தவறவிடக் கூடும்; ஒருவேளை தொடர்ந்து தோல்வி நேர்ந்தால், அது உங்களின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்க்கும்;


தொடர்ந்து முயற்சிப்பதல்லாமல்

வெற்றிகாண வேறு வழியேதுமில்லை பராபரமே!


யார் எத்தனை உதவிபுரிந்தாலும்

அதை ஏற்று பயன்படுத்த

நீங்கள் முயற்சித்தால் மட்டுமே அதுசாத்தியப்படும்;


முயற்சிமட்டுமே

எல்லா வினைகளையும் களைந்து

கனவுகள் மெய்பட வழிவகுக்கும்;


- [ம.சு.கு 27.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page