top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-140 - வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள்!"

Updated: Feb 27, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-140

வாக்குறுதிகளில் கவனமாக இருங்கள்!


  • ஒரு புராண உதாரணத்தில் இந்தமுறை துவங்குவோம். போர்முனையில் தனக்கு நல்ல தேரோட்டியாக இருந்து வெற்றிபெற உதவிய கைகேகிக்கு இரண்டு வரங்கள் தருவதாக தசரதன் வாக்குறுதி அளித்தார். அதை தேவைப்படும்போது கேட்டுக்கொள்வதாக கைகேகி சொல்லிவிட்டார். இராமன் பட்டாபிஷேகத்தின்போது அவருக்கு தேவை வரவே, வாக்குறுதிகள் விளையாடி ஆரன்யவாசம் துவங்கியது. தன் மகிழ்ச்சியான தருணத்தில் வாக்குறுதியை வாரிவழங்கிவிட்டு, பின் பாதகமான வகையில் நிறைவேற்ற வேண்டிய தருணம் வரும்போது, அதுவே பெரிய சிக்கலாகி விடுகிறது..

  • வியாபாரத்தில் ஒரு பூ வியாபாரி ஒரு கோவில் திருவிழாவிற்கு குறிப்பிட்ட பூக்கள் விற்பனையை ஒத்துக்கொள்வதோடு, விலையையும் அப்போதே நிர்ணயித்தார். வாங்குபவரகள் பின்னால் வந்து பேரம் பேசக்கூடாதென்று முன்னரே விலையை நிர்ணயித்து முன்பணம் பெற்று சரியான நேரத்தில் தர வாக்குறுதியளித்தார். அடுத்த ஓரிரு வாரங்களில் திடீரென்று மழை அதிகரிக்கவே, பூக்களின வரத்து கனிசமாக குறைந்து விலை பல மடங்கு உயர்ந்தது. கோவிலுக்கு கொடுக்கப்பட வேண்டிய நாளில், ஒத்துக்கொண்ட விலையைவிட மூன்று மடங்கு விலைக்கு பூக்களை கொள்முதல் செய்து கொடுக்க வேண்டியதாய் இருந்தது. சந்தை நிலவரங்களை கருத்தில் கொள்ளாமல் வியாபாரத்தில் வாக்குறுதி அளித்து மாட்டிக்கொண்டால் பெரிய நஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.

மகிழ்ச்சியில் தன் மனைவிக்கு தசரதன் வாக்குறுதி கொடுக்க, கூனியின் வஞ்சகம் வாக்குறுதிகளை வினையாக்கியது. விளைவு ஆரண்யம், கவரிமான், அனுமன், இலங்கை, போர், இறுதியில் பட்டாபிஷேகமென இராமாயண இதிகாசம் உருபெற்றது. இப்படி மகிழ்ச்சியான தருணங்களில் வாக்குறுதி கொடுத்து பின்னர் நிறைவேற்ற முடியாமல் நீங்கள் மாட்டிய சூழ்நிலைகளை சற்றே நினைவுகூறுங்கள்.


பூ வியாபாரியை போல எண்ணற்ற வர்த்தகர்கள் சந்தை நிலவரத்தை கணக்கில் கொள்ளாமல் அளவுக்கு அதிகமாக வாக்குறுதிகளை அளித்து வர்த்தக சிக்கலில் சிக்குகின்றனர். இந்த வாக்குறுதிகளே இன்று சூதாட்டம் போல பங்குச் சந்தையிலும், பொருட்களின் எதிர்கால விலை குறித்து விளையாடுவதிலும் (பியூட்சர் / ஆப்சன்) விபரீதமான அளவுகளில் போய்விட்டன. அடுத்த ஆண்டு விளையப்போகும் பொருளுக்கும், அதற்கடுத்த ஆண்டு உற்பத்தியாகும் பொருளுக்கும் இன்றே சந்தையில் விலையை நிர்ணயிக்கும் வர்த்தகம் நடக்கிறது.


பொதுவாக நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, அதை கொண்டாடும் எண்ணத்தில் நம்மை சுற்றியுள்ளவர்கள், நம்மை சார்ந்தவர்கள் மகிழ்ச்சி அடையட்டும் என்பதற்காக பரிசு தருகிறேன், சம்பள உயர்வு தருகிறேன், இதை வாங்கித்தருகிறேன் என்று உறுதியளிப்போம். சிலசமயம், மாதாமாதம் இதைச் செய்கிறேன் என்று வாக்குறுதி அளிப்போம். கொடுத்தவாக்குறுதிக்கிணங்க சில மாதங்கள் செய்தாலும், வியாபார நெருக்கடிகள் வரும்போது, அந்த வாக்குறுதிகள் மிகப்பெரிய பாராமாகிவிட்டதை உணர்வோம். எதற்காக அப்படியொரு வாக்குறுதி கொடுத்தோம் என்று அன்றைக்கு யோசிப்பதில் பயனேதுமில்லை.


காதலிக்கும் காலங்களில், தன் அன்பிற்கினியவளுக்கு காதலன் நிறைய வாக்குறுதிகளை வழங்குகிறான். திருமணமான பின் ஓரிரு மாதங்களில் அதை தொடர்ந்து செய்ய முடியாமல் திணருகிறான். அவன் வாக்குதவறிவிட்டான், அவன் மாறிவிட்டான் என்று அவளின் குறைகூறல் துவங்கிவிடுகிறது. காதல் போதையில் இப்படி சிக்காதவர்கள் யாருமிருக்க வாய்ப்பில்லை.


எப்போதுமே மகிழ்ச்சியான தருணங்கள் ஒருவனை பெருந்தன்மை உடையவனாக்கிவிடுகிறது. தன்னை சார்ந்தவர்களும் மகிழட்டுமென்று தன்னால் செய்ய முடிந்ததையெல்லாம் ஒத்துக்கொள்கிறார்கள். அன்றைக்கு செய்யமுடிந்தவை, என்றைக்கும் செய்ய சாத்தியப்படுமா என்பதை ஒருகணம் யோசிக்கத் தவறிவிடுகின்றனர். அதேபோல, அப்போதைக்கு நேரம் இருக்கிறதென்பதற்காக, தனக்கு தேவையில்லாத ஒரு காரியத்தை செய்ய ஒப்புக்கொள்கின்றனர். பின்னர் முக்கியமான வேலைகள் வரும்பட்சத்தில், நேரமில்லாமல் தவிக்கின்றனர். தனக்கு தேவையில்லாதது, முக்கியத்துவமில்லாததென்றால், “இல்லை”, “வேண்டாம்”, “முடியாது” என்று சொல்லாமல், சரியென்று ஒத்துக்கொண்டு பின்னர் முழிக்கிறார்கள்.


அப்போதைக்கு மட்டும் செய்யும் வேலையானால், வாக்குறுதி கொடுத்து செய்தால் பெரிய பாதகமில்லை. அதேசமயம் நாளை, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்று எதிர்காலத்தில் செய்வதற்காக வாக்குறுதி கொடுப்பதில் தான் அதீத கவனம் தேவை. இன்றைய சூழ்நிலைகளை மட்டும் கருத்தில் கொண்டு வாக்குறதி அளித்துவிடக்கூடாது. நாளைய தினம் வியாபார சூழ்நிலைகள் மாறினால் வாக்குறுதிகளை காப்பாற்ற முடியுமா என்று ஒருநிமிடம் யோசிக்க வேண்டும். உங்கள் வாக்குறுதிகளை நம்பி அடுத்தவர் பல்வேறு செயல்களுக்கு திட்டமிட்டிருக்கலாம். நீங்கள் வாக்குதவறினால் அவரும் சிக்கலில் சிக்கக்கூடும்.


யாருக்கேனும், எதற்கேனும், எப்பொழுதேனும் வாக்குறுதி கொடுக்கவேண்டிய நிலை வருகிறதென்றால், கீழ்கண்ட சூழ்நிலைகளில் அவற்றை தவிர்க்கவும்;

  • உணர்ச்சிவயப்பட்ட நிலையில், எந்த வாக்குறதியும் அளித்துவிடாதீர்கள்;

  • அடுத்தவரின் சரியாண தேவை என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளாமல், வாக்குறுதி அளிக்காதீர்கள்;

  • உங்கள் கௌரவத்திற்காகவும், பகட்டிற்காகவும், வீராப்பிற்காகவும் தேவையற்ற வாக்குறுதிகளை சபையில் அளித்துவிடாதீர்கள்;

  • தாழ்வுமனப்பான்மையினால் சிக்கித்தவிக்கும்போது, உங்களை நிரூபிக்கிறேன் என்ற பெயரில் தேவைக்கு அதிகமாக எந்தவொரு வாக்குறுதிகளையும் அளித்துவிடாதீர்கள்;

வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டிய காலத்தின் அளவிற்கேற்ப, அதுகுறித்து நீங்கள் சிந்திப்பதற்கும் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருநிமிடம் அவசரப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டு பின் பத்துவருடம் அதை நிறைவேற்ற கஷ்டப்படுவதைவிட, ஒருமணிநேரம் கூடதலாக எடுத்து, நடைமுறையையும், எதிர்கால சாத்தியக்கூறுகளையும் யோசித்து பின் ஒத்துக்கொள்வதும், வாக்களிப்பதும் பாதுகாப்பானது.


மகிழ்ச்சியாக இருக்கும் போது

இயல்பாக நிறைய பெருந்தன்மை வருகிறது;

அந்த மகிழ்வான தருனங்களில்

அதிகமாக வாக்குறுதி அளித்துவிடாதீர்கள்;

பின்னாளில் நிறைவேற்றமுடியாமல்

வார்த்தை மீற நேரிடலாம்;


வாக்குறுதிகள் உங்களுடைய வாக்கின் உறுதி மொழிகள்;

வாக்கு கொடுத்தால் வார்த்தை மாறாக்கூடாதென்பது

நம் இரத்ததில் ஊறிய பண்பாடு;


வாக்குக்கொடுப்பதற்கு முன்

தேவையான அளவு சிந்தித்துவிட்டு

வாக்குக்கொடுத்தால் பரவாயில்லை;

அவசரத்தில் வாக்குக்கொடுத்து

அவஸ்தையில் மாட்டிக்கொள்ளாதீர்கள்!


- [ம.சு.கு 26.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page