top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-139 - வேகத்திற்கும் அவசரத்திற்கும் நிறைய வேறுபாடுண்டு!"

Updated: Feb 26, 2023

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-139

வேகத்திற்கும் அவசரத்திற்கும் நிறைய வேறுபாடுண்டு!


  • அதிவேக நான்கு சக்கர வாகன பந்தயம் உலகளவில் பிரசித்திபெற்றது. இதில் பங்குபெறும் நான்கு சக்கர வாகனங்கள் சர்வசாதாரணமாக மணிக்கு 200 கி.மீ-க்கும் அதிகமான வேகத்தை துவங்கிய 10 நொடிகளுக்குள் கடந்து விடுகின்றன. அந்த வேகத்தில் வாகனத்தை பொது சாலையில் இயக்குவது சாத்தியமில்லை. இந்த வேகத்தில் நடக்கும் போட்டியில் கட்டாயம் சில வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. பல வாகனங்கள் எல்லையை கடந்துவிடுகின்றன. இதில் நடக்கும் விபத்தில் பெரிதாய் உயிர்சேதம் ஏற்புடுவதில்லை. ஆனால் அதைவிட குறைந்த வேகத்தில் போகும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் போது நிறைய உயிர்சேதங்கள் ஏற்படுகின்றன. ஏன்?

  • தொழிற்சாலையில் உற்பத்தி நடந்துகொண்டிருக்கிறது. பொருட்களை இயந்திரத்தில் வைப்பதும், எடுப்பதுமாய் ஊழியர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். பல ஆண்டு பழக்கம் அவர்களை அதிவேகமாக செய்ய வைத்தது. புதிதாய் வருபவரால் அதில் பாதியளவு கூட செய்ய முடியாது. அவர்கள் இயந்திரத்தில் வைத்தெடுப்பதில் ஒரு சில நொடி தாமதமேற்பட்டாலும், அவர்களின் கைகள் இயந்திரத்தில் சிக்கிவிடக்கூடும். இந்த அபாயம் இருந்தாலும், விபத்துக்கள் ஏதுமில்லாமல் ஒவ்வொருவரும் பொருப்புடன் தொடர்ந்து வேகமாக வேலை செய்கின்றனர். ஆனால் புதிதாய் வருபவர்கள் சிலர் மற்றவர்களைப் போல வேகமாக செய்யவேண்டுமென்ற அவசரத்தில் சில தவறுகள் செய்து சிறிய விபத்துக்கள் ஏற்படுகின்றன.

பந்தயங்கள் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் நடக்கின்றன. நன்கு பழக்கப்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர். போதுமான பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் எல்லோரும் பயன்படுத்துகின்றனர். அந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் வீரர்கள் வேகத்தை அதிகரித்து முன்னேறுகின்றனர். எந்த கட்டத்தில் அவர்கள் அவசரப்பட்டு வேறுமுயற்சிகளை மேற்கொள்கிறார்களோ, அப்போது அவைகளில் ஏதேனும் தவறுகள் நேர்ந்து விபத்துஏற்பட வாய்ப்பாகிறது. அதேசமயம், அதிவேகமாக வாகனத்தை பொது சாலைகளில் இயக்கும்போது, வேறுவாகனத்தை அவசரமாக முந்திச் செல்ல முயற்சிக்கும் போது, விபத்துக்கள் ஏற்பட வாயப்பாகிறது. அவ்விடத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில்லாததால் அந்த விபத்துக்கள் பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்துகிறது. எவ்வளவு வேகமாக செல்கிறீர்கள் என்பதைவிட, எந்தளவிற்கு வாகனம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது முக்கியம். கட்டுப்பாடற்ற சூழ்நிலையில், நீங்கள் அவசரப்பட்டு வாகனத்தின் வேகத்தை அதிகரித்தாலும், சில முந்தல் முயற்சிகளை மேற்கொண்டாலும் விபத்து விபரீதமாகிறது.


தொழிற்சாலைகளிலும் அதே நிலைதான். நன்குபழக்கப்பட்ட வேலைகளை அதிவேகமாக செய்வார்கள். கரணம் தப்பினால் மரணமென்றாலும், அவர்கள் எளிதாக செய்து முடிப்பார்கள். அதேசமயம், ஏதேனும் கவனச்சிதறல்கள் ஏற்படும் போதும், வழக்கத்திற்கு மாறாக அவசரப்பட்டு வேறேதேனும் செய்யும்போது தவறுகள் நேர வாய்ப்பாகிறது. புதிதாக வருபவர்கள், மற்றவர்களுக்கு இணையாக செய்யவேண்டுமென்று முயற்சிப்பார்கள். அந்த வேகம் படிப்படியாகத்தான் வரும் என்ற புரிதல் இல்லாமல் அவசரப்பட்டு சிக்கிக்கொள்கிறார்கள். இதை வழக்கமாக புதிய வாகன ஓட்டிகளிடம் காணலாம். இன்னும் வாகனத்தில் அவர்களது கை-கால் கோர்வையான இயக்கம் பழக்கப்படுவதற்கு முன்னரே, அவசரப்பட்டு வேகத்தை இயக்கி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர்.


நீங்கள் வேகமாக செய்ய முயற்சிப்பதில் தவறில்லை. இன்றைய அதிவேக உலகில், மெதுவாக செய்தால் தாக்குப்பிடிக்க முடியாது. வேகம் அத்தியாவசியமாகிறது. ஆனால் அந்த வேகத்தில் செய்யும் போது, செய்கின்ற வேலை எந்தளவிற்கு உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்பது முக்கியம். அவசரப்பட்டு வேலையின் முறைமைகளை மாற்றிச் செய்தால் ஆபத்துக்கள் ஏற்படத்தான் செய்யும்.


அவசரப்படும்போது என்ன நேருகிறது

  • செய்துகொண்டிருக்கும் வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக முறைமையில் செய்வதற்கு பதிலாய், ஒன்றைவிட்டு இன்னொன்றுக்கு அவசரமாக தாவிவிடுகின்றனர். அப்படி முறைமைகளை மாற்றுவதால், சில குழப்பங்களும், அபாயங்களும் நேர வாய்ப்பிருக்கிறது;

  • அவசரமாக செய்யும்போது, மனஅழுத்தம் அதிகரிக்கிறது. மனஅழுத்தம் உடல்நலத்தை பாதிப்பதோடு, சிலசமயம் தவறான முடிவுகளை எடுக்கவும் வாய்ப்பாகிறது.

  • மற்றவர்கள் சொல்வதை முழுவதும் கேட்காமல் பாதியில் அவசரப்பட்டு செய்ய ஆரம்பித்தால், பாதியிலேயே முட்டிக்கொண்டு நிற்கவேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

  • படிப்பதிலும் அவசரத்தைக்காட்டி அரைகுறையாக படித்தால், புரிந்துகொள்வதில் தவறுகள் நேர்ந்து அறிவும் அரைகுறையாகிவிடும்.

படிப்பது, கேட்பதில் அவசரப்பட்டு அறிவு அரைகுறையானால், அவை ஆபத்தில் முடியலாம். எல்லாவற்றையும் வேகமாக செய்ய முடியும். பழக்கப்பட்ட கைகளானால், வேகம் இன்னும் அதிகமாகத்தான் இருக்கும். அதேசமயம் ஏதேனும் அவசரம் தொற்றிக்கொண்டால், செய்கின்ற செயலில் கவனச்சிதறல்கள் ஏற்பட்டுவிடும். கவனச்சிதறல்கள் விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.


வேகமாக செய்யவேண்டுமென்று

முயற்சிப்பதில் தவறில்லை;

கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில்

பழக்கப்பட்ட சூழ்நிலையில்

வேகம் வரவேற்கத்தக்கதே;


அதேசமயம் செய்கின்றவற்றை

அவசரமாக செய்யமுற்படும்போது

முறைமைகளை மாறி குழப்பமேற்படுவதும்

படபடப்பு அதிகரித்து மனஅழுத்தாம் உருவாவதும்

தேவையற்ற விபத்துக்களுக்கு வழிவகுத்துவிடும்;


வேகமாகச் செய்பவரால்தான்

எதையும் முதலில் முடிக்க முடியும்;

அதேசமயம் சரியாக செய்யவேண்டியது முக்கியக் கடமை;

வேகமாக தவறாக செய்வதில் பயனேதுமில்லை;



- [ம.சு.கு 25.02.2023]

7 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page