top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-128 - ஐந்து நிமிடம் கஷ்டப்பட தயாரா நீங்கள்?"


“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-128

ஐந்துநிமிடம் கஷ்டப்பட தயாரா நீங்கள்?


  • குழந்தைகள் சிலசமயம் தண்ணீரைக் கண்டு பயந்தோ அல்லது நீர் மிகவும் குளிர்ந்திருப்பதற்கு அஞ்சியோ நீச்சல் குளத்தில் இறங்க மறுக்கும். நீங்கள் பலமுறை சொன்னால், ஒரு கட்டத்தில் வேண்டா வெறுப்பாக இறங்கும். அப்படி இறங்கிய குழந்தையிடம் ஐந்துநிமிடம் கழித்து வா போகலாம் என்று கூப்பிட்டால், வெளியே வர மறுக்கும். ஐந்து நிமிடத்தில் தண்ணீர் பழகிப்போய் அதில் சுகம் காணும். அதேபோலத்தான், குழந்தைகள் புதியவர்களைக் கண்டால் முதல் ஐந்து நிமிடங்கள் பேசுவதற்கு தயங்கும். ஒரு ஐந்துநிமிடம் புதிய குழந்தையுடன் விளையாட ஆரம்பித்ததும், நன்றாக பழகிப்போய், விளையாட்டை விட்டு வெளியே வரமாட்டேன் என்று கூறிவிடும்;

  • உங்கள் உடலை நன்றாக பராமரிக்க, தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து உடற்பயிற்சிக்கூடத்திற்கு வருவதாக பதிவு செய்திருப்பீர்கள். உடல் நலத்தை பேணிக்காக்க, இதை கட்டாயம் எழுந்து கடைபிடிக்க மன உறிதியுடன் உறங்கச் செல்வீர்கள். மறுநாள் காலை, 5 மணிக்கு கடிகாரம் அடிக்கும். ஆனால், இன்று சோம்பலாக இருக்கிறது, சிறிது நேரம் தூங்கலாம் என்று மனம் சமாதானம் சொல்லும். அதேபோல, இன்று சற்று உடல் களைப்பாக இருக்கிறது, அதனால் உடற்பயிற்சியை நாளை வைத்துக் கொள்ளலாம் என்று மனம் அடுத்த சமாதானத்தை சொல்லும். இந்த மனதின் ஏமாற்றும் சமாதானங்களை ஏற்றால், நீங்கள் நினைத்த மாற்றம் எதுவுமே நிகழாது. ஆரம்பிக்க கஷ்டப்பட்டு தள்ளிப்போட் காரியங்கள் எதுவும் பின்னர் ஆரம்பிக்கப்படவையில்லை, ஆனால் ஆரம்பத்தில் இருக்கின்ற முதல் ஐந்து நிமிட இயல்பான சோம்பலும், களைப்பையும் தாண்டி நகரத்துவங்கிவிட்டால், பின்னர் ஐந்துநிமிடம் எப்படி ஒரு மணிநேரம் வரை சென்றதென்று உங்களுக்கே கூட ஆச்சரியமாகும் வகையில் ஈடுபாடு வந்துவிடும்;

குழந்தைகள் எந்தநேரத்தில் எதைக்கண்டு பயப்படுகிறார்கள் என்று அருதியிட்டு சொல்ல முடியாது. ஒன்றில் இறங்கும் வரை மிகவும் யோசிக்கும் குழந்தை, சற்று பழகிவிட்டால் - 2 மணிநேரங்களில் எல்லோருடனும், பழகி சகஜமாகிவிடும். பின்னர், பெற்றோர்கள் தாமதம் செய்தால் பெரிதாய் பாதிப்பு இருக்காது.


தினமும் காலை எழுந்து உடற்பயிற்சி செய்ய விரும்பினால், எதையும் பொருட்படுத்தாமல், கடிகாரம் ஓலித்தவுடன் எழுந்து வேலையை துவங்க வேண்டும். சற்று நேரம் கழித்து ஆரம்பிக்கலாம் என்று சாக்கீடு சொல்லி தள்ளிப்போட்டால், 5 மணி என்பது 7 மணியாகிவிடும்; கடிகாரம் அடித்ததும் எழுந்து ஐந்துநிமிடம் பல்துலக்கி முகம் கழுவினால், பின் தூக்கம் விலகிவிடும். அதேபோல, வாகனம் எடுத்து உடற்பயிற்சிக்கூடம் சென்று ஐந்து நிமிடம் உடற்பயிற்சி செய்யத்துவங்கும் வரைதான் எல்லா சோம்பேறித்தனமும். ஐந்து நிமிடம் கடந்துவிட்டால் , ஏவ்வளவு கடினமாக வேலையும் ஏளிதாக செய்யப்பழகிப்போகும்;


ஒரு சபையில் நின்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலோ அல்லது ஒரு பொருளைப்பற்றியோ பேசவேண்டிய கட்டாயம் வருகிறது. உங்களுக்கு அதைப்பற்றி நன்கு தெரிந்திருந்தாலும், பேச்சு இயல்பாக வரத்துவங்கும் வரை சற்று கடினம். இயல்பாகிவிட்டால், பின்னர் எல்லாம் தானாக வந்துவிடும்;


  • புதிய வேலையில், புதிய கல்லூரியில் சேருகிறீர்கள். அங்கு எல்லாமே புதியதுதான். ஆனால் நீங்கள் கற்றறிந்த பாடமும், அனுபவ அறிவும் தனித்துவம்தான். புதிய இடத்தின் சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டில் வரும்வரை முதலில் சற்று திணரலாகத்தான் இருக்கும். ஆரம்பகட்ட கடினங்களை களைந்துவிட்டால், பின்னர் படிப்பும், வேலையும், இயல்பாகி விடும்;

  • நீங்கள் புதியதாக விளையாட்டு ஒன்றையோ, சமையல் நுணுக்கத்தையோ, கைவினைப்பொருட்கள் செய்வதையோ கள்ளுக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். ஆரம்பத்தில் அவை கம்பசூத்திரமப் போல கடினமாக இருக்கும், அதில் சற்றே இலயித்து ஐந்து நிமிடம் கடந்துவிட்டால், பின்னர் அது தானாக இயங்கத்துவங்கிவிடும்; ஒரு கட்டுரை எழுத நினைத்தால், முதலில் தலைப்பை நிர்ணயித்து ஒரு ஐந்துநிமிடம் அதில் தெரிந்ததை எழுத ஆரம்பித்தால், அந்த கட்டுரை தானாக வளர்ந்துவிடும்;

  • நல்ல புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கும்வரை, பின்னர் செய்யலாம் என்று தள்ளிப்போடுகிறார்கள். புத்தகத்தின் சில பக்கங்களை வாசித்தபின், அதை தொடர்வது மிகவும் எளிமையாகி விடுகிறது. புதிய அலுவலக திட்டங்கள், புதிய திட்ட அறிக்கைகள் என்று எண்ணற்ற புதிய விடயங்கள் ஆரம்பிக்கும் வரைதான் எல்லா கஷ்டமும். துவங்கி 5 நிமிடம் கடந்துவிட்டால், எல்லாம் தானாக இயங்கத் துவங்கிவிடும்;

இன்றைய அவசர உலகில் எல்லாமே அவசரம் தான். இன்று கையில் இருப்பறவற்றைக் அந்த சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றித்தந்து, எல்லோரும் பயனடையும் வகையில் செய்கின்றனர்.


உலகில் எல்லாமே கடினம் தான் – செய்யத்துவங்காதவரை!

உலகில் எல்லாமே எளிமைதான் – ஐந்துநிமிடம் செய்யத்தொடங்கியதும்!


எதைச் செய்வதானாலும், முதல் ஐந்துநிமிடத்தில்

முயற்சிசெய்து தடைகளை கடந்திடுங்கள் – எல்லாம்

தானாக நடந்து முடியும்!


- [ம.சு.கு 14.02.2023]







Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Kommentare


Post: Blog2 Post
bottom of page