top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-127 - முன்னேவர தயங்காதீர்கள்!

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-127

முன்னேவர தயங்காதீர்கள்?


  • பள்ளியில் ஆசிரியர் கேள்வி கேட்கும்போது நீங்களாக எழுந்து பதிலளித்துள்ளீர்களா? “எங்கே நீ சொல்” என்று ஒரு குறிப்பிட்ட மாணவனை பார்த்து ஆசிரியர் கேட்டால், அவனுக்கு தெரிந்திருந்தால் உடனே பதில் சொல்கிறான். அதே மாணவன் கேட்காமல் எழுந்து சொல்வதில்லை. இப்படி வகுப்பில் பதில் தெரிந்திருந்தும், எத்தனை பேருக்கு தானாக எழுந்து பதில் சொல்ல தயக்கம்? ஏன் இந்த தயக்கம்? கேள்விகளுக்கு பதில் கூறுவது மட்டுமல்லாமல், யார் பேச்சுப் போட்டியில் பங்கெடுத்துக்கொள்ள விரும்புகிறீர்கள் என்று கேட்டாலும் அமைதி. ஏதோ ஓரிரு மாணவர்கள் தைரியமாக பெயர் கொடுப்பார்கள். ஏனையவர்களுக்கு பயம் கலந்த தயக்கம். ஏன் இத்தனை தயக்கம்?

  • வியாபாரத்தில் அவ்வப்போது வரும் வாய்ப்புக்களை யார் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதில்தான் எல்லா பெரிய வெற்றிகளும் அடங்கியிருக்கிறது. என்னென்ன வகையான வாய்ப்பு வரவிருக்கிறதென்று சந்தையை யார் கூர்ந்து கவனிக்கிறாரோ, அவரால் அதை சீக்கிரமாக கிரகித்து பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கும். மின்னனு பணபரிவர்தனை, வாடகை வாகனம் எடுத்தல், உணவு வாங்குதல் என்று எல்லா வியாபார வாய்ப்பையும் அந்தந்த துறையில் முதலில் கால்பதித்து முழு மூச்சாய் முயன்றவர்கள், அதற்கேற்ற செயலிகளை உருவாக்கி பெரும் வெற்றி பெற்றார்கள். மற்றவர்கள் சோதனைசெய்து நிரூபிக்கட்டும், பின்னர் நாம் களத்தில் குதிக்கலாம் என்று காத்து நின்ற நிறுவனங்கள்யாவும், பத்தோடு பதினொன்றாய் தாக்குப் பிடிப்பதற்கு போராட வேண்டியுள்ளது.

இங்கு யார் முன்னாடி வருகிறாரோ, அவருக்குத்தான் 75% வெற்றிவாய்ப்பு. அடுத்துவருபவருக்கு 50%-க்கும் குறைவான வாய்ப்புதான். ஏனெனில் புதிய பொருளுக்கான சந்தை மாதிரியை முதலில் வருபவர் உருவாக்குகிறார். அப்போது சந்தையில் அவர் வைப்பதுதான் விதி. பின்னால் வருபவர்கள் நிறைய போராட வேண்டிவரும். பின்னால் வருபவர்களுக்கு போட்டிகள் மிக அதிகம். அந்த போட்டிகள் உருவாவதற்கு முன் முதலில் வருபவரால் பல படிகள் முன்சென்று விடமுடியும். அதே சமயம், முன்செல்பவருக்கு முயற்சியில் தோற்று உள்ள செல்வத்தை முற்றிலுமாய் இழக்கவும் வாய்ப்பிருக்கிறது.


பள்ளிப்பாடத்தை நன்றாக படித்திருந்தாலும், ஏனோ ஆசிரியர் கேட்கும்போது மட்டும் எழுந்துநின்று தானாக சொல்ல எண்ணற்ற தயக்கம் வந்துவிடுகிறது; அந்த தயக்கமே அடுத்த கட்ட வளர்ச்சியை தள்ளிப்போடுகிறது. சரியோ-தவறோ, உங்களுக்கு கிடைக்கும் முதல் வாய்ப்பை, நீங்கள் தைரியமாக பயன்படுத்தினால் தான் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். கல்வியைத்தாண்டி, விளையாட்டிலும் யாரொருவர் தைரியமாக முதல் அடியை எடுத்து வைக்கிறாரோ, அவருக்கு மட்டுமே வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.


  • படிக்கும் போது சந்தேகம் வந்தால் உடனே ஆசிரியரிடம் சென்று சந்தேகம் கேட்டுவிட்டால், தெளிவுடன் அடுத்த பாடத்தை படிக்கலாம். ஆசிரியராக சொல்லட்டும், அல்லது வேறு யாரேனுமொருவர் கேட்கட்டும் என்று காத்திருந்தால் எண்ணற்ற நேரத்தை வீணடிக்க வேண்டியதுதான்.

  • பந்தியில் உணவருந்த முதலில் வருபவருக்கு எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். கடைசியில் வருபவருக்கு ஓரிரு வகைகள் தீர்ந்ததனால் கிடைக்காது.

  • ·வேலையில், நீங்கள் எல்லாவற்றையும் சரியாக செய்தாலும், உங்கள் மேலாளரிடம் நீங்கள் செய்தவற்றை தெளிவாக விளக்கி உங்கள் திறமைகளை தெரியப்படுத்தினால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பதிகம். நீங்கள் நன்றாக செய்தாலும், அதை நீங்களாக முன்சென்று மேலாளரிடம் பேசவில்லை என்றால், உங்கள் வளர்ச்சி சில சமயங்கள் தடைபடக்கூடும்;

  • ·செய்யும் வேலையை விட்டுவிட்டு, சுயமாக தொழில் செய்து சாதிக்க வேண்டுமென்று ஆசையிருக்கும். ஆனால் அதற்கான முதல் அடியை யாரோ வந்து எடுத்துவைக்க மாட்டார்கள். நீங்களதான் தைரியமாக முதல் அடியை எடுத்துவைக்க வேண்டும்.

  • நீங்கள் ஒரு மேடைப்பேச்சாளர் ஆக விரும்பினால், எத்தனை முறை பேசவேண்டியதை எழுதிவைத்து மனப்பாடம் செய்தாலும் பெரிதாய் பலன் இருக்காது. சிறந்த பேச்சாளர் ஆகவேண்டுமானால், சிறுசிறு கூட்டங்கள் துவங்கி நிறைய மேடைகளில் தைரியமாக பேச ஆரம்பிக்க வேண்டும். நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளை கண்டவரால், எளிதில் மனம் கவரும் வண்ணம் பேசமுடியும்;

மேலே குறிப்பிட்ட எல்லா உதாரணங்களும், உங்களின் அன்றாட வாழ்வில் வந்துபோகும் சிறுசிறு நிகழ்வுகளே. இதுபோன்று எண்ணற்ற சூழ்நிலைகள் உங்கள் வாழ்வில் வந்துபோகும்.வருகின்ற வாய்ப்பை தவறவிடாமல், பயப்படாமல் சரியாக முயற்சிப்பவருக்கு வெற்றி எளிதாகிறது;


வெற்றி பெற

வாய்ப்புக்களை தொடர்ந்து தேடுங்கள்;

கிடைத்த வாய்ப்பை

முதலாவதாக பயன்படுத்துங்கள்;


மற்றவர்கள் பண்ணட்டும்

நாம் கடைசியாக செய்வோம் என்று

காத்திருந்தால்

வாழ்வின் பொன்னான தருணங்களை

இழந்து நிற்பீர்கள்;


எதற்கும் அஞ்சாமல்

தைரியமாக முதல் அடியை வைப்பருக்கு

வெற்றிக்கான வாய்ப்பு எளிதாகும்;


- [ம.சு.கு 13.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page