top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-123 - மாற்று வழிகளையும் முன்கூட்டியே யோசித்திடுங்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-123

மாற்று வழிகளை முன்கூட்டியே யோசித்திடுங்கள்!


  • பல முக்கியமான தேர்வுகளுக்கு, இரண்டு கேள்வித்தாள்களை தயார் செய்து அச்சிட்டு வைத்திருப்பார்கள். ஏதேனும் காரணங்களால் முதல் கேள்வித்தாள் வெளிப்பட்டாலோ, அல்லது மறுதேர்வு நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ, முன்னதாக தயார் செய்து வைத்துள்ள மாற்றுக் கேள்வித்தாளை தேர்விற்கு பயன்படுத்துவார்கள். அதுபோல, தேர்வு அதிகாரிகள் வரவில்லையென்றால் மாற்று ஏற்பாடென்ன? தேர்வு நடத்தப்படும் இடத்தில் சிக்கல் உருவானால் மாற்று இடம் எது? என்று எண்ணற்ற விடயங்களை / சாத்தியக்கூறுகளை தேர்வு நடத்துபவர்கள் முன்னதாகவே யோசித்து அதற்கான அடிப்படை ஏற்பாடுகளையும் செய்துவைத்துவிடுவார்கள். இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் தவிற வேறுயாருக்கும் தெரிவிக்காமல் வைத்திருப்பார்கள். ஏதேனுமொரு நெருக்கடி ஏற்பட்டால் மட்டுமே இந்த மாற்றுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்து பொதுஜனத்திற்கு தெரியவரும்;

  • ஒருபெரிய விழாவிற்கு, அமைச்சரையோ, விளையாட்டு வீரரையோ, சிறப்பு விருந்தினராக அழைத்திருப்பார்கள். ஏதேனும் அவசர காரணங்களால் அவர்களால் வரமுடியாத நிலை ஏற்படும்போது, மாற்று ஏற்பாடாக வேறுசில முக்கியஸ்தர்களிடம் சொல்லி வைத்திருப்பார்கள். இது சிறப்பு அழைப்பாளர்கள் மட்டுமென்றல்லாமல், விழாவில் உரைநிகழ்த்திக்கூடிய வல்லுனர்கள், அரங்க அமைப்பாளர்கள், ஒலி-ஒளி அமைப்பு விடயங்கள், விருந்தினர் மேலாண்மை என்று விழாவின் ஒவ்வொரு விடயத்திலும், மாற்று ஏற்பாடுகளைப் பற்றி விழா ஏற்பாட்டாளர்கள் யோசித்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் கடைசி நிமிட நெருக்கடிகளால் அதீத மனஅழுத்தம் ஏற்படுவதோடு, சில குழறுபடிகள் ஏற்படவும் வாய்ப்பாகலாம்.

முக்கியத் தேர்வுகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்வதுபோல, பல தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளுக்கும் மாற்று ஏற்பாடுகள் செய்ப்பட்டிருக்கும். மழையினால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அதற்கென்று கூடதலாக ஒரு நாளை அட்டவனையில் சேர்த்திருப்பார்கள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட மைதானம் பாதிக்கப்பட்டால், மாற்று மைதானம் என்ன? என்ற எல்லா திட்டங்களையும் முன்னரே யோசித்து அதற்கான முன்னேற்பாடுகளையும் செய்து வைத்து விடுவார்கள்.


சற்று யோசித்துப் பாருங்கள், சர்வதேச ஒலிம்பிக் போட்டி நடக்கும்போது ஒரு மைதானத்தில் திடீரென்று ஒடுகளம் மழையினால் பாதிக்கப்பட்டுவிட்டதென்று, எல்லா போட்டிகளையும் 1-2 நாட்களுக்கு தள்ளிப்போட நேர்ந்தால், எத்தனை குளறுபடிகள் ஏற்படுமென்று!


தேர்வு, விளையாட்டுக்களை தாண்டி முக்கிய பிரமுகர்கள் செல்லும் பயனப் பாதை, செல்லக்கூடிய வாகனம், பாதுகாப்பு அதிகாரிகள், நிகழ்ச்சி நடத்தப்படும் இடம் என்று எல்லாவற்றிற்கும், விழா அமைப்பாளர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் மாற்று ஏற்பாடுகளை செய்கிறார்கள். நிகழ்ச்சிகளின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மாற்று திட்டங்கள், ஏற்பாடுகள் ஒன்றுக்கு இரண்டாய் செய்துவைக்கக்கூடும். அதை செய்யத்தவறினால், பொறுப்பாளர்களின் மேலாண்மை குளறுபடுகளையே அது வெளிச்சப்படுத்தும்.


இதேபோன்று அலுவலக வேலைகளிலும், திட்ட செயல்பாடுகளிலும், வியாபாரத்திலும் எண்ணற்ற மாற்று ஏற்படுகளை நீங்கள் முன்கூட்டியே யோசிக்க வேண்டும்;

  • ஊழியர்கள் விடுப்பெடுத்தால் யாரைக்கொண்டு நிர்வகிக்கவேண்டும்;

  • வாடிக்கையாளரிடம் இருந்து பணம் வசூலாக தாமதமானல், எப்படி வரவு-செலவுகளை சமாளிப்பது;

  • விற்கப்பட்ட பொருட்களில் ஏதேனும் பழுதுகள், செயல்பாட்டு குறைபாடுகள் இருந்தால் அதை உடனுக்குடன் எப்படி சரிசெய்து வாடிக்கையாளரை திருப்திபடுத்துவது;

  • தொழிற்சாலையில் திடீரென்று மின்சார துண்டிப்பு ஏற்பட்டால் எப்படி உற்பத்தியை தொடர்வது;

  • முக்கிய சந்திப்புக்களில் கணிணியோ, கைப்பேசியோ வேலைசெய்வதில் குளறுபடி ஏற்பட்டால் மாற்று கருவி என்ன;

  • பொருட்கள் வந்து சேர / அனுப்பிவைக்க தாமதமானால், மாற்று ஏற்பாடுகள் மூலம் எப்படி அந்த தாமதத்தை சரிகட்டுவது;

  • செயல்படுத்தப்படும் திட்டங்களின் செலவு அதிகரித்தால், எப்படி கட்டுப்படுத்துவது;

என்று எண்ணற்ற விடயங்களில், அவற்றை செய்யும்போது, ஒருவேளை அதில் தவறு ஏற்பட்டால், அதற்கான மாற்று ஏற்பாடுகள் என்ன என்பதை முன்கூட்டியே யோசித்து வைக்கவேண்டியது இன்றைய அவசர யுகத்தில் கட்டாயத் தேவையாக உள்ளது.


விளையாட்டு, வியாபாரங்களைத் தாண்டி, திருமணத்தில் மணமகன், மணமகளுக்கே மாற்று ஏற்பாடுகள் நடந்து திருமணம் நடைபெற்ற சம்பவங்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். நாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் தான். ஆனால் உலகத்தின் இயக்கம் உங்கள் கையில் இல்லை. மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இப்படி உங்களைத் தவிற மற்ற எதுவுமே உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத போது, உங்கள் திட்டங்கள் யாவும் அப்படியே நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தால், சில சமயம் நீங்கள் ஏமாற்றத்தை சந்திக்க நேரிடும்.


அப்படி கடைசி நிமிட ஏமாற்றங்களையும், மனஅழுத்தத்தையும் தவிர்க்க, எல்லா முக்கியமான செயல்களுக்கும் / பொருட்களுக்கும் உரிய மாற்று ஏற்பாடுகளை யோசித்து வைத்திருங்கள். தேவைப்பட்டால், நிகழ்வுகளின் முக்கியத்துவத்திற்கேற்ப அந்த மாற்று திட்டங்களுக்கான அடிப்படை முன்னேற்பாடுகளையும் செய்து வைத்துவிடுங்கள்.


மாற்றுத் திட்டங்கள் முன்கூட்டியே தயாராக இருந்தால்

கடைசி நிமிட ஏமாற்றங்களும், மனஅழுத்தமும் குறையும்;


ஒன்றைமட்டுமே நம்பி காத்துக்கொண்டிருந்தால்

சில சமயங்களில் ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள வேண்டிவரும்;


அந்த ஏமாற்றங்களை தாங்கிக் கொள்ளலாம் என்று

முன்கூட்டியே தயாராக இருந்தால், அதுவும் ஒரு மாற்றுத்திட்டம் தான்!!


- [ம.சு.கு 09.02.2023]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page