top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-120 - சின்னச்சின்ன ஏமாற்றங்களுக்கு மனம்தளர்ந்துவிடாதீர்கள்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-120

சின்னச்சின்ன ஏமாற்றங்களுக்கு மனம்தளர்ந்துவிடாதீர்கள்!


  • இரயில் பயனச்சீட்டு முன்பதிவு செய்ய நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருப்பீர்கள். உங்களின் பக்கத்து வரிசை சற்று வேகமாக நகர்வது கண்டு நீங்கள் வரிசைமாறி நிற்பீர்கள். ஏனோ அந்த வரிசை நீங்கள் வந்தபின் மெதுவாக நகரும். நீங்கள் பக்கத்தில் வரும்போது, உங்கள் வரிசை ஊழியர், உணவருந்த எழுந்து செல்வார். ஒருமணி நேரமாக கால்வலிக்க நின்றிருந்த உங்களுக்கு அதீத கோபம் வரும். அதற்காக அந்த ஊழியரை திட்ட முடியுமா? இப்படி சில காத்திருப்புக்கள் வருவது இயல்பு. அதற்காக இனிமேல் இரயிலில் பயனம் செய்யமாட்டேன் என்று முடிவெடுப்பது சாத்தியமா? சின்னச்சின்ன காத்திருப்புக்களுக்கு மனவேதனை அடைந்தால், எப்படி பெரிய திட்டங்களில் இறங்கமுடியும்;

  • உங்கள் வியாபாரத்தில், நீங்கள் பெரிதாய் எதிர்பார்த்திருந்த ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர் இந்த மாதம் வரவில்லை. அதனால் இந்த மாதம் சிறிது நஷ்டம். அந்த ஒரு வாடிக்கையாளர் வரவில்லை என்பதற்காக மனம்தளர்வதில் ஏதேனும் அர்த்தமிருக்கிறதா? இங்கு சந்தை மிகப்பெரிது. ஒரு வாடிக்கையாளரை இழந்தாலும், இன்னும் நூறு வாடிக்கையாளரை பிடிக்க எண்ணற்ற வாய்ப்புக்கள் இருக்கின்றன. சிறிய இழப்புக்களைப் பற்றி கவலைப்படாமல், எப்படி அவைகளை சமாளித்து வெற்றிகொள்வதென்பதில் கவனம் செலுத்துங்கள். எதிர்காலத்தில் அப்படிப்பட்ட சின்ன இழப்புகளும் நேராமலிருக்க என்ன முன்னெச்சரிக்கைகளை செய்யமுடியும் என்பதையும் யோசியுங்கள்;

முன்பதிவிற்காகவோ, நுழைவுச்சீட்டு வாங்கவோ நீங்கள் வரிசையில் நின்று களைப்புறலாம். வரிசை என்றாலே காத்திருப்புதான். சிலசமயம் ஏமாற்றமும் வரும். சின்ன காத்திருப்பையும், சில ஏமாற்றங்களையும் கண்டு சோர்வுற்றால், பெரிய விடயங்களை எப்படி கையாள்வது. பெரிய திட்டங்களில் எண்ணற்ற திசைகளில் இருந்து சிக்கல்கள் வரும். சின்னச்சின்ன விடயங்களுக்கே மனவேதனை அடைந்தால், எப்படி பெரிய சிக்கல்களை உங்களால் கையாள முடியும்;


பெரிய சந்தையில், ஒரு வாடிக்கையாளர் வராவிட்டால் வியாபாரம் இருண்டுவிடாது. நிறைய புதிய வாடிக்கையாளரை உங்களால் சேர்க்க முடியும். ஆனால் அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் நம்பிய வாடிக்கையாளர் வரவில்லை என்று மனம்தளர்ந்து உட்கார்ந்தால், எப்படி புதியவர்களை சேர்ப்பது. விளையாட்டோ, வியாபாரமோ, வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வரும். சுழற்சியில் வரும் தோல்விகளைக் கண்டு அஞ்சி விலகினால் எதையும் சாதிக்க முடியாது. வாழ்வின் யாதார்த்தத்தையும், வியாபார நடைமுறையையும் புரிந்து கொண்டு, தற்காலிகமான சிறுசரிவுகளை கண்டு மனம் தளராமல் உழைப்பவருக்கு மட்டுமே பெரிய வெற்றிகள் சாத்தியப்படும்;


உங்களின் அன்றாட வாழ்வில் எண்ணற்ற காத்திருப்புக்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள், தோல்விகள் வரலாம். அவை சிறிதாகவோ, பெரிதாகவோ இருக்கலாம். அவற்றைக் கண்டு மனம்தளர்ந்து வேறொன்றிற்கு மாறுவதானால், நீங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கநேரிடும். சிறுசரிவுகளில் மனம்தளராமல் எழுந்து நின்று போராடுங்கள்.

  • ஒரு பாடத்தை சரியாக படிக்காததால் மதிப்பெண் குறைந்தால், மனம்தளராமல் அந்த பாடத்தில் கவனத்தை அதிகரியுங்கள்;

  • இரயிலோ, விமானமோ தாமதமானால், தேவையின்றி மனஅழுத்தத்தை அதிகரிப்பதில் பயனில்லை, மாறாய் தாமதத்தை அனுசரிக்கும் மாற்றுதிட்டத்தை யோசியுங்கள்;

  • குழந்தைகள் மதிப்பெண் எடுக்காவிட்டால், வெறுமனே திட்டுவதில் பயனில்லை, மாறாய் அவர்களின் கற்றலை மேம்படுத்த வழிதேடுங்கள்;

  • சகஊழியர் தவறு செய்தாலோ, நீங்கள் செய்தது பிழையானாலோ, அதையே நினைத்து வருந்திக்கொண்டிருக்காமல், அடுத்த ஆகவேண்டியதை கவனியுங்கள்;

  • உங்கள் துணையின் சின்னச்சின்ன ஊடல்களை பெரிதாய் பொருட்படுத்தாமல், அவர்களால் உங்கள் வாழ்க்கை முழுமை பெற்றுள்ளதை உணருங்கள்;

  • அன்றாடம் வாழ்க்கைப்பயனத்தில் சின்னச்சின்ன பிரச்சனைகள் நிறைய வரலாம். எதற்கும் பதட்டப்படாமல் பொறுமையாக நிலைமையை கையாளுங்கள்;

  • முதலீடுகளில் சில இழப்புகள் வரலாம். அதையே நினைத்து வருந்தாமல், வியாபார அறிவை, நிதிமேலாண்மை அறிவை இன்னும் மேம்படுத்துங்கள்;

  • சிறிதாய் உடல்வலியும், உபாதைகளும் வரலாம். வலிகளை கண்டு பயப்பாடமல், ஆரோக்கியமான வாழ்விற்கு உகந்த வாழ்வியல் முறையை கட்டமைத்துக் கொள்ளுங்கள்;

இப்படி, நம் அன்றாட வாழ்வில் நாம் பெரிதாய் பொருட்படுதாமல் கடந்து செல்லவேண்டிய நிறைய சின்னச்சின்ன விடயங்கள் இருக்கின்றன. சந்தர்ப்ப-சூழ்நிலைகள், நிகழ்வுகளுக்கேற்ப எதை கவனிக்க வேண்டும், எதை தவிர்க்க வேண்டுமென்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்;


சின்னச்சின்ன ஏமாற்றங்களைகண்டு மனம் தளர்ந்துவிடாதீர்கள்;


தொடர்ந்து ஜெயித்துக்கொண்டே இருந்தால்

அகந்தை வந்துவிடுமென்று இறைவன் அவ்வப்போது

சிறுசிறு தோல்விகளைக் கொடுத்து நினைவுபடுத்துவார்;


நம்பிக்கை இழக்காமல் இருந்தால்

வானம் ஒருநாள் வசப்படும் என்பதில் ஐயமில்லை!!


- [ம.சு.கு 06.02.2023]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Post: Blog2 Post
bottom of page