top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-76 – ஆசை இருக்கு - தகுதி இருக்கிறதா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-76

ஆசை இருக்கு - தகுதி இருக்கிறதா?


  • இரண்டு நண்பர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசையிருக்கிறது. ஒருவருக்கு நல்ல ஆஜானபாகுவான உடல் அமைப்பு. இன்னொருவருக்கு சராசரியான உடலமைப்பு. இருவருக்குமே குறிப்பிட்ட விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், நல்ல உடல் அமைப்பு உடையவர், அன்றாடம் பயிற்சி செய்வதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அதேசமயம், சராசரியான உடல் அமைப்பு கொண்டவர், தினமும் காலையில் முறையாக பயிற்சி செய்கிறார். இருவருக்கும் ஆசைகள் ஒரேமாதிரி இருந்தாலும், தேர்வு செய்யப்படும் நாளன்று, அந்த ஆஜானுபாகுவான நபரால் ஏனோ களத்தில் அதிகநேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை தொடர்ந்து பயிற்சி செய்த நபர் இறுதிவரையில் களத்தில் நீடித்திருந்து தேர்வானார்...

  • பல கல்லூரிப் பேராசிரியர்கள், இளைய சமுதாயத்தினருக்கு பயன்படும் வகையில் சிறந்த கட்டுரைகளை, கதைகளை, புத்தகங்களை படைத்து, அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டுமென்று ஆசைப் படுகின்றனர். அதற்காக நிறைய யோசிக்கவும் செய்கின்றனர். ஆனால், வெறுமனே யோசித்துக் கொண்டு மட்டுமே நேரத்தைகடத்தினால் படைக்கும் ஆசை நிறைவேறுமா? “செய்ய வேண்டுமென்ற எண்ணம் முக்கியம் தான்”. எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். ஆனால் அந்த எண்ணம் மட்டுமே உங்களுக்கு அந்த இலட்சியத்தை அடைவதற்கான தகுதியை கொடுக்குமா? என்று உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். தினந்தோறும் எழுதும் பழக்கம் கொண்ட ஒரு ஆரம்பக் கல்வி ஆசிரியர், மாநில அளவில் நடைபெற்ற கட்டுரை போட்டியில், முதல் பரிசு வெல்கிறார். ஆனால் அதிகமாக எழுதும் பழக்கம் இல்லாத முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்கள், சிறந்த கட்டுரைகளை படைக்க திணறுகின்றனர்.

கால்பந்து, கைப்பந்து, மட்டைப்பந்தாட்டம் என்று ஏதேனும் ஒரு விளையாட்டில் சாதிக்க வேண்டுமென்ற ஆசை நம்மில் பலருக்கு இருக்கிறது. ஆனால் ஆயிரத்தில் ஒருவர் தான், எந்தவொரு விளையாட்டிலும், அடுத்த கட்டத்திற்கு போகிறார். மிக உயரிய நிலையை அடைந்த எல்லா வீரர்களும், வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து போராடி படிப்படியாக தங்களின் தகுதியை வளர்த்துக் கொண்டு சிகரத்திற்கு வந்தவர்களே! அதேசமயம், ஒரு சிலர் அடுத்தகட்டத்திற்கு செல்ல தனக்கு அதிஷ்டம் இல்லையென்று கூறி தப்பித்து விடுகின்றனர்.


எனக்கும், உங்களுக்கும் தோன்றுவது போல சாதாரணமான ஆசையாகத்தான் சாதனையாளர்களுக்கும் அது துவங்கியிருக்கிறது. அந்த ஆசையை அடைவதற்கான தகுதியை தங்களின் கடுமையான அன்றாட பயிற்சியின் மூலம் அவர்கள் வளர்த்துக் கொண்டனர். தொடர்ந்து தகுதியை வளர்த்துக்கொண்டே வரும் அவர்களுக்கு, ஏன்றேனும் கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது. பயிற்சி இல்லையென்றால், தகுதிச்சுற்றுகளிலேயே வெளியேறிவிட நேரிடுகிறது.


சிறந்த கருத்துக்களை மக்களுக்கு சொல்ல நிறைய எழுத வேண்டும். உங்களின் முதல் எழுத்தையே உலகம் புகழ வேண்டும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம். எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும், அவரின் எல்லா படைப்புகளும் வெற்றியடைந்து விடுவதில்லை. அவர்களின் எழுத்துக்கள், காலக்போக்கில் சொற்செறிவும், பொருள்வளமும் கூடி மேன்மை பெறுகிறது. தொடர்ந்து எழுதுவது, அவருள் வந்துபோகும் எல்லா எண்ணங்களையும் வெளிப்படுத்த உதவுகிறது. அவர் எழுதியவற்றின் தொகுப்பிலிருந்த சிறந்த எண்ணங்கள் சில, மக்களால் பெருவாரியாக அங்கீகரிக்கப்பட்டு மாற்றத்தினை நிகழ்த்துகிறது.


யாராலும் முதல் புகைப்படத்தை சிறந்ததாக எடுத்து விடமுடியாது. ஒரே முறையில் சிறந்த புகைப்படம் எடுப்பதை காட்டிலும், கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும், காணும் ஒவ்வொரு கட்சியையும் வெவ்வேறு கோணங்களின் புகைப்படம் எடுத்தால், எடுக்கப்பட்ட ஆயிரம் புகைப்படத்தில் பத்து சிறந்தவைகளை எளிதில் தேர்ந்தெடுக்கலாம். சிறந்தவற்றை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தால், தொடர்ந்து அதை செய்து கொண்டே இருங்கள். உங்களின் தொடர்ந்த செயலில், சிறந்தவைகள் தானாக வெளிப்படும். ஒன்றும் செய்யாமல் சிறந்த புகைப்படத்தை எடுக்க ஆசைமட்டும் பட்டுக் கொண்டிருந்தாள், எல்லா வாய்ப்புகளும் கைநழுவி போய்க்கொண்டே இருக்கும்.


வெற்றி உங்களை வந்து சேர வேண்டுமானால், அதை பெருவதற்கான, தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களின் வெற்றிக்கனவுகளை புரிந்துகொண்ட சிலநல்ல உள்ளங்கள், அதற்கான வாய்ப்புக்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும்போது, அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள போதிய திறமை இல்லாவிட்டால், எல்லாமே வேடிக்கையாகிவிடும்;


சிறந்த போர் வீரனாக ஆசைப்பட்டால், வில்லும் வாளும் பயிற்சியால் வசப்பட வேண்டும். இல்லாவிட்டால், எதிராளியின் வில்லும் வாளும், உங்கள் உடலில் குத்தி அதன் வசப்பட்டு நீங்கள் சாகவேண்டி வரும்.


வெற்றி என்பது வெறும் ஆசையோடு முடிவதல்ல;

“ஆசை” வெறும் துவக்கப்புள்ளிதான்;

இலக்கை அடைவதற்கான பயணம் தான் “தகுதி”;

அந்த தகுதியை வளர்ப்பவர்கள்

வெற்றியை நோக்கி சீக்கிரத்தில் முன்னேறுகின்றனர்;

ஏனையவர்களுக்கு அது கனவாகவே தொடர்கிறது.


எந்தத் தகுதியும் பிறப்பால் வருவதல்ல (ஓரிரண்டைத் தவிர)

எல்லா தகுதிகளும் கடினமான உழைப்பால்,

முயற்சியால் வளர்க்கப்பட வேண்டியவையே;


வெற்றிபெற அதிர்ஷ்டமில்லை என்று

சொல்வதில் அர்த்தமில்லை!

அதிர்ஷ்டம் என்பதே முயற்சியின் மறுவடிவம்தான்;

முயற்சிப்பவர்களின் பாதையில் வாய்ப்பு அதிர்ஷ்டமாகிறது;

முயலாதவர் பாதையில் வாய்ப்பு திரதிஷ்டமாகிறது;

- [ம.சு.கு 24.12.2022]

11 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page