top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-66 – தேர்வு செய்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-66

தேர்வு செய்வதற்கு ஏன் பயப்பட வேண்டும்?


  • பன்னிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர வேண்டிய தருணம். எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்று குழப்பம் இருக்கும். பெற்றோரின் ஆலோசனை, ஆசிரியர், சுற்றத்தார், நண்பர்கள் என்று எண்ணற்றவர்களிடம் இருந்து பல ஆலோசனைகள் வந்து குழப்பத்தை அதிகரிக்கும். ஒவ்வொருவரின் ஆலோசனையும், வெவ்வேறு துறைகளின் சாதக-பாதகங்களை அவரவர்கள் கண்ணோட்டத்தில் கூறியிருப்பார்கள். நாட்கள் நெருங்கும்போது, எதை தேர்ந்தெடுப்பது என்ற பயம் அதிகரிக்கும். குறிப்பிட்ட நாள் வரும்போது, கலந்தாய்வில் நன்றாக யோசித்து தீர்க்கமான முடிவை எடுக்கிறோமா?

  • சிறிது சிறிதாக சேர்த்த பணம் சில லட்சங்கள் கையிருக்க, அதை மேலும் பெருக்குவதற்கு எங்கு முதலீடு செய்வதென்று முடிவெடுக்க வேண்டும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாமா? வட்டிக்கு கொடுக்கலாமா? நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யலாமா? தொழில் தொடங்கலாமா? வங்கியில் குறைந்த வட்டியில் வைப்புநிதியாக பாதுகாப்பாக வைக்கலாமா? என்று எண்ணற்ற வாய்ப்புகள் முன்னிருக்கும். வாய்ப்பு எதுவாயினும், அதில் ஏதேனும் ஒரு சிறிய அபாயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த அபாயங்களை கண்டு பயந்து, எதையும் தேர்வு செய்யாமல் கையிலே பணத்தை வைத்திருந்தால், பணத்தின் மதிப்பு நாளடைவில் குறைந்துபோகும். எந்த முடிவும் எடுக்காமல் எப்படி பணத்தை பெருக்கமுடியும்?

பட்டப்படிப்பிற்கு ஒரு துறையை தேர்வுசெய்தாலும், அந்தத் துறையினுள் எண்ணற்ற உட்பிரிவுகள் இருக்கிறது. அதில் எந்த பிரிவை தேர்வு செய்வதென்பது அதனினும் கடினமான கேள்வி. அவற்றுள் ஒன்றை தேர்வுசெய்யாமல் மேலே பயனிக்க முடியாது. எப்படி தேர்வு செய்வது? - அந்தத் துறையை பற்றி வலைதளத்தில் தேடலாம், துறைசார்ந்த நபரிடம் ஆலோசனை கேட்கலாம். எதுவுமே கிடைக்கவில்லை என்றால், உங்கள் கண்ணோட்டத்தில் எது சரியென்றுபடுகிறதோ, அதை நம்பிக்கையுடன் தேர்வு செய்து முன்செல்ல வேண்டியதுதான். ஆலோசனை கிடைக்கவில்லை என்பதற்காக காலம் கடத்திக்கொண்டிருக்க முடியாது. எல்லா துறைகளுக்கும் கட்டாயம் ஏதேனுமொரு வேலைவாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அதை அடுத்து வரும் தேர்வுகளில் தேடிக்கொள்வோம் என்று தைரியமாக இறங்கினால் எல்லாம் சாத்தியமாகும்.


ஒருபுறம் எதை கற்பது? என்ற கேள்வி; மறுபுறம் எந்த வேலை சிறந்தது? பணத்தை எப்படி ஈட்ட வேண்டும்? எப்படி சேமிக்க வேண்டும்? என்று கேள்வி; ஈட்டிய பணத்தை எங்கு முதலீடு செய்வது? என்று அடுத்த கேள்வி; சம்பாதித்த பணத்தை எப்படி பாதுகாப்பது என்றுகூட தெரியாமல், அதை பயத்தோடு சுமந்து வாழ்கிறார்கள் சிலர். செல்வம் மகிழ்ச்சி தரும் என்று சொன்னார்கள், ஆனால் இந்த பணத்தை எப்படி பாதுகாப்பது? எப்படி முதலீடு செய்து வருவாய் ஈட்டுவது? என்று உள்ளூர பயத்தில் திணறுகிறார்கள். இந்த பயத்தின் இடையே, தங்கள் முன் இருக்கும் தேர்வுகளையும், வாய்ப்புகளையும் சரிவர அலசி ஆராயாமல், பிறர் சொற்களுக்கு செவி சாய்த்து ஏதேனும் ஒன்றில் முதலீடு செய்கிறார்கள். அவற்றில் சில சமயம் ஏமாந்தும் போகின்றனர்!


தேர்ந்தெடுக்க பல வழிகள் இருக்கும் இடத்தில், தேர்வு செய்ய ஏன் இத்தனை பயம். ஒரு வேளை நிறைய வாய்ப்பிருப்பதுதான் இந்த பயத்திற்கு காரணமா? ஒரு தேர்வு மட்டுமே இருந்திருந்தால், பயமிருந்திருக்காதா?

  • கல்லூரி கல்வியில் எந்த பாடத்தை தெரிவு செய்தால், எதிர்காலத்தில் வேலை கிடைக்கும் என்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்க பயம்!

  • எந்த வேலையில் சேர்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று முடிவெடுப்பதில் பயம்!

  • வாகனங்களை எடுத்து ஓட்டிப் பழக பயம்! வாகன நெரிசலில் ஒட்டிச்செல்ல பயம்!

  • சந்தேகங்களை தீர்க்க ஆசிரியரிடம் கேள்வி கேட்க பயம்!

  • புதிய ஊர்கள், புதிய மனிதர்களைக் கண்டால் பயம்!

இப்படி எதைக் கண்டாலும் பயந்தால் எப்படி வாழ்வது. வேலையில் பதவி உயர்வு பெற்று புதிய ஊர்களுக்கு போக பயந்து அதே இடத்தில் இருந்தால் எப்படி முன்னேறுவது. உங்கள் முன் ஆயிரமாயிரம் வாய்ப்புகள் வந்து போகும் அவற்றை இனம் கண்டு நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.

  • இதை எடுத்தால் இப்படி நடந்து விடுமோ?

  • இதைச் செய்தால் இவர் தவறாக எண்ணுவாறோ?

  • இது நமக்கு கஷ்டமாக இருக்குமோ?

  • இது நமக்கு ஒத்து வருமா?

என்று பயத்தை மட்டுமே பிரதானப்படுத்தி, அந்த கண்ணோட்டத்திலேயே பார்த்தால், எல்லாமே பிரச்சனைக்குரியவையாகத்தான் தோன்றும். இவை காரணமில்லாத பயம் என்று சிலர் சொல்லக்கூடும். உண்மையில் இவை உங்களின் தன்னம்பிக்கை குறைபாட்டினால் ஏற்படும் பயங்கள்;


இவை எல்லாவற்றிலும், நமக்கு முன்னே இலட்சக்கணக்கானோர் செய்து முன்னேறி இருக்கின்றார்கள். இதை நம்மால் செய்ய முடியும், என்ற நம்பிக்கையோடு களம் இறங்குவது தான் முக்கியம். உங்கள் முன் இருக்கும் வாய்ப்புகளில் ஒன்றை நன்கு சிந்தித்து, தீர்க்கமாக தேர்வு செய்யுங்கள்; சிந்திக்காமல் முடிவெடுத்து மாட்டிக்கொள்வதில்தான் எல்லா பயங்களும் நம்மை தொற்றிக் கொள்கிறது; சாதக-பாதகங்களை அலசிய பின் முடிவெடுத்துக் களம் கண்டால், எதற்கும் அசராமல் இலக்கை நோக்கி தைரியமாக பயணிக்க முடியும்;


நடப்பது நடக்கட்டும்

தவறுகள் நேர்ந்தால் திருத்திக் கொள்ளலாம்

என்று களம் புகுந்தவர்கள் மட்டுமே

கரை கண்டு சாதித்தார்கள்;

ஏனையவர்கள் - பயத்தில் மூழ்கியே சாகிறார்கள்;


- [ம.சு.கு 14-12-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comentarios


Post: Blog2 Post
bottom of page