top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-47 – அவசரத்தை செய்யவா? அவசியத்தை செய்யவா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-47

அவசரத்தை செய்யவா? அவசியத்தை செய்யவா?


 • உயர் இரத்த அழுத்த நோயினால் பலகாலம் சிரமப்பட்டுவந்த குடும்ப தலைவருக்கு. திடீரென்று மாரடைப்பு வருகிறது. பெரிதாய் ஏதும் செல்வம் சேர்த்து வைக்காத குடும்பம், அங்கும் இங்கும் கடன்பட்டு பெரிய மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றுகிறது. பரிசோதித்த மருத்துவர் சொல்கிறார், உடல்பருமனும், உணவுக்கு கட்டுப்பாட்டின்மையும், போதிய உடற்பயிற்சியின்மையுமே இந்த அபாய நிலை ஏற்பட காரணமென்று! இந்த அவசர நிலைக்கு என்ன காரணம்?யார் காரணம்?

 • புதிய வாடிக்கையாளரை நாளை சந்திக்க ஏற்பாடாகிறது. அந்த சந்திப்பில் அவரது வியாபாரத்தை வெல்ல சில முன்னேற்பாடுகளுடன் சென்று அவரை அசத்தினால், வியாபாரம் கைகூடும். அதற்கு என்ன தயார் செய்ய வேண்டுமென்று நீங்கள் யோசித்து விட்டீர்கள். அவற்றை எப்படி செய்வது? எப்போது செய்வது? யாரைக் கொண்டு செய்வது? நாளை காலை 10 மணி சந்திப்புக்கு, காலை 9 மணிக்கு அமர்ந்து அவற்றை செய்ய துவக்கினால் போதுமா? அது சரியா?


திடீர் மாரடைப்பும், மருத்துவ உதவியும் மிகமிக அவசரமான நிலை. அந்த அபாயத்தை தாண்ட மருத்துவ உதவியை பெறுவது தவிற, வேறு வழியேதுமில்லை. அந்தத் தருணத்தில், அது அவசரத்தோடு மிக அவசியமும் ஆகிவிட்டது. ஆனால் சற்றே பின்னோக்கிச் சென்று அவசரம் எது? அவசியம் எது? என்று யோசியுங்கள். பல காலமாய் தவறான வாழ்வியல் முறைகளால், ஆரோக்கயமற்ற உணவு பழக்கத்தினால், உடல் பருத்து இரத்த அழுத்தம் கூடி மாரடைப்பு வந்திருக்கிறது. இந்த அவசர நிலை ஏற்படுவதற்கான எல்லா காரணிகளையும் தெரிந்திருந்தும், அதைத்தடுத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கான முயற்சிகளை ஏன் செய்யவில்லை.


ஆரோக்கியத்தை உங்களின் அவசியத் தேவையாக உணர்ந்து அதற்குரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டதால், இன்று மாரடைப்பென்ற பெயரில் அவசரத் தேவையாக மருத்துவமனையில் நிறுத்தியிருக்கிறது.


புதிய வாடிக்கையாளர் சந்திப்பிற்கு தயார் செய்வது முக்கியம். அதேசமயம் இன்றைக்கு பலஅவசர வேலைகள் இருக்கும். இன்றைய அவசரங்களை கருத்தில்கொண்டு, நாளை காலையில் பார்த்துக் கொள்ளலாம் என்று முன்னேற்பாடுகளை தள்ளிப் போட்டால் என்ன நேரும்:


 • ஒன்று – நீங்கள் எதிர்பார்த்த வண்ணம் மறுநாள் காலை அவற்றை தயார் செய்து முடிக்கலாம்;

 • அல்லது - காலை வேறு அவசர வேலைகள் வந்து, உங்களுக்கு தயார் செய்யப் போதிய அவகாசமல் கிடைக்காமல், அந்த வாடிக்கையாளர் சந்திப்பு அரைகுறையாக முடியலாம்;

இரண்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒருவேளை இரண்டாவது நடந்து அந்த வாடிக்கையாளரின் வியாபாரத்தை பெறமுடியாவிட்டால்? உங்கள் வியாபாரத்தை எப்படி விரிவாக்குவது? இங்கு எது அவசரம், எது அவசியம்? இன்றைய அவசரத்தைப் பார்த்து நாளைய அவசியத்தை செய்யாமல் தள்ளிப் போட்டால், நாளை அதுவும் அவசரமாக வந்து நிற்குமே!


இப்படி எல்லா வியாபாரங்களும், ஆரோக்கியமும் அவசரகதியாகவே இருந்தால், இரத்த கொதிப்பு உட்பட எல்லா வாழ்வியல் நோய்களும் உங்களை சீரழிக்குமே! உங்களுடைய

 • அவசர வேலைகள் என்ன?

 • அவசியமான வேலைகள் என்ன?

 • எதை எப்போது செய்ய வேண்டும்?

 • எதை நீங்களே செய்தாக வேண்டும்?

 • எதை மற்றவரை கொண்டு செய்ய வேண்டும்?

என்று சிந்திக்கிறீர்களா? போதிய திட்டமிடல் இருக்கிறதா?


இந்தக் கேள்விகள் மிக சாதாரணமாக தோன்றலாம். ஆனால் அடிப்படையானவை! மேலாண்மை கல்வியில், இதை “ஐசனோவர் அணி / ஐசனோவர் கட்டம்” என்று ஒரு நேரமேலாண்மை திட்டமிடல் முறையாக கற்பிக்கின்றனர். நீங்கள் உரியதை, உரியநேரத்தில், உரியவாறு, உரியவரைக்கொண்டு செய்து வெற்றிபெற விரும்பினால், ஒரிரு மணிநேரத்தை இந்த ஐசனோவர் கட்டம் குறித்து படித்துணர மூலதனம் செய்யுங்கள். அந்த எளிமையான முறைமை, உங்கள் திட்டமிடலில், வெற்றிப்பயனத்தில் மிகப்பெரிய வழிகாட்டியாக எல்லாத் துறையினருக்கும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.


எது

 • அவசரமில்லாத அவசியங்கள்

 • அவசியமில்லாத அவசரங்கள்

 • அவசியமான அவசரங்கள்

 • அவசரமில்லாத அனாவிசயங்கள்

என்று புரிந்து, இதில் எதை நீங்கள் செய்ய வேண்டும், எதை பிறரிடம் கொடுத்து செய்ய வேண்டும், எதை அடுத்தவருக்கு கற்றுக் கொடுத்து காலப்போக்கில் செய்ய வைக்க வேண்டும், எதை யாரும் செய்யவே தேவையில்லை [உத; தொலைக்காட்சியில் தொடர்நாடகம் பார்ப்பது....] என்று தெளிவுடன் திட்டமிட்டு செயல்படத் துவங்குங்கள். இந்த நேரமேலாண்மையுடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடு, உங்கள் வாழ்வில் வெற்றியையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் உறுதிசெய்யும்.


- [ம.சு.கு 25-11-2022]

Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Comments


Post: Blog2 Post
bottom of page