top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-45 – களத்தில் வீரம் மட்டுமல்ல சமயோசிதமும் அதிமுக்கியம்!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-45

களத்தில் வீரம் மட்டுமல்ல சமயோசிதமும் அதிமுக்கியம்!


  • இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள், ரஷ்யாவை (உருசியா) பிடிக்கும் முயற்சியில், அந்த நாட்டின் எல்லைக்குள அதிவேகமாக முன்னேரினர். அந்த சமயத்தில் குளிர்காலம் தொடங்கியது. உருசிய நிலப்பரப்பு மிகப்பெரியது. கடும் குளிரின் தாக்கத்தில், ஹிட்லரின் படைகள் மேற்கொண்டு முன்னேறவும் வழியின்றி, ஆயுதம் மற்றும் உணவும் குறித்த நேரத்தில் வந்து சேர வழியில்லாமல் பெரும் தோல்வியை சந்திக்க நேர்ந்தது. வீரமும், ஆயுத பலமும் இருந்தும், தவறான திட்டமிடலில் ஜெர்மன் உருசியாவிடம் மண்ணை கவ்வியது.

  • சில வீடுகளில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்து விட்டால், பெற்றோர்கள் திட்டுவார்களோ என்று பயப்படும். அதனால் ஒரு சில குழந்தைகள், பெற்றோர்களாக கண்டுபிடித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று, அந்த தவற்றைப் பற்றி எதுவுமே சொல்லாமல் மறைத்துவிடும். சில குழந்தைகள் சற்று யோசித்து, பெற்றோர்களில் யாரிடம் முதலில் சொன்னால் விளைவுகள் குறைவாக இருக்கும்? அவரை கொண்டு மற்றவரை எப்படி சமாளிப்பது? என்று கணக்கிட்டு, பெற்றோர்களாக கண்டுபிடிக்கும் வரை காத்திருக்காமல், தானாக முன்வந்து செய்த தவறை இயல்பான நடையில் சொல்லிவிடும். அவர்களாக வந்து ஒப்புக்கொண்டதால், பெற்றோர்களும் அந்த தவறை பெரிதுபடுத்தாமல், சாதாரணமாக ஏற்றுக் கொள்வார்கள்.


போரில் வெற்றி பெற, எவ்வளவு படைகள்? எவ்வளவு ஆயுதபலம்? இருக்கிறதென்பது மட்டுமே முக்கியமன்று. யாரை தாக்குகிறோம்? எப்போது தாக்குகிறோம்? அவருடைய பலம்-பலவீனம் என்ன? எதிரொலியின் தயார் நிலை என்ன? என்பதையும் அலசி ஆராய்ந்து தாக்குதலை கொடுத்தால், வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். இதில் எதைக் கோட்டை விட்டாலும், அந்த ஒரு புள்ளியல் எதிராளி நம்மை வீழ்த்தக்கூடும். எதிரியாளியை நோக்கி, நாம் முன்னேறுவதானால், எண்ணற்ற விடயங்களை நாம் முன்னதாக ஆலோசித்து, தெளிவான திட்டங்களை வகுக்க வேண்டும்? எதிராளி நம்மை நோக்கி நம் இடத்துக்கு வருகிறான் என்றால், அவனுடைய ஒரு பலவீனம் போதும், நமக்கு அவனை வரும்வழியிலேயே வீழ்த்த. எதிராளியுடைய மண்ணில் நாம் நுழைய முயற்சிக்கும் யுத்தியும், நம் மண்ணின் எதிராளி நுழைவதை முறியடிக்கும் யுத்தியும் வெவ்வேறு. கால-நேரம், களம், எதிராளியின் பலம்-பலவீனம், என்று எல்லாவற்றையும் அலசி, சமயோசிதமாக செயல்படுபவன், தன் சிறிய படையை கொண்டு பெரிய சாம்ராஜ்யத்தையும் சரித்து விட முடியும்.


இன்றைய குழந்தைகளின் சாமர்த்தியத்திற்கு அளவே இல்லை. நம்மை விட வெகவேகமாக இருக்கிறார்கள். குழந்தைகளை எப்படி வளர்ப்பது? என்று நாம் கற்றுக் கொள்கின்ற வேகத்தைவிட, நம்மை எப்படி சமாளிப்பது? என்று அவர்கள் எளிதாக கற்றுக் கொள்கின்றார். தேவைப்படும் நேரத்தில் அன்பை ஆயுதமாகவும், சில நேரத்தில் தங்களின் அமைதியை கேடயமாகவும், சில இடங்களில் பிடிவாதத்தையும், சாமர்த்தியமாக கையாண்டு, அவர்கள் விரும்பியதை சாதித்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு அடுத்தபடியாக பெண்கள், எதை-எந்த நேரத்தில் கேட்க வேண்டும்? எதை கேட்கக்கூடாது? என்று சாமர்த்தியமாக செயல்பட்டு, தன் கணவன்மார்களிடம் சாதிக்கிறார்கள். போர்களம் மட்டுமே களமல்ல; உங்கள் அலுவலகமும், வீடும் அன்றாடம் சந்திக்கும் பெரிய களங்கள் தான். அங்கு சண்டை போட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். சண்டை போடாமல், நீங்கள் ஜெயிக்க வேண்டுமானால், உங்களின் ஒரே ஆயுதம் புத்திகூர்மையும், சமயோசிதமான செயல்பாடும்தான்;


  • யாருக்கு எது பிடிக்கும் - பிடிக்காது?

  • யாரிடம் எதைப் பேச வேண்டும் - எதை பேசக்கூடாது?

  • யார், யாருடைய சொல்லுக்கு கட்டுப்படுவார்கள்?

  • யாருடைய பலம் என்ன - பலவீனம் என்ன?

  • யாரால் எதை செய்ய முடியும் - எதை செய்ய முடியாது?

  • யாருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது - யாருக்கு இல்லை?


என்ற இந்த அடிப்படை விடயங்களுக்கு, போதுமான அளவு சிந்தித்து, உரிய திட்டங்களை வகுத்து செயல்பட்டால், யாரையும் வென்று எளிதாக முன்னேற முடியும்;


கத்தியும், வாளும் மட்டுமே ஆயுதம் என்றில்லை

புத்தியும், வாயும் அதனிலும் பெரிய ஆயுதமே;


- {ம.சு.கு 23.11.2022]

10 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

コメント


Post: Blog2 Post
bottom of page