top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-19 – தரித்திரம் வேறு தரித்திர புத்தி வேறு!"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-19

தரித்திரம் வேறு - தரித்திர புத்தி வேறு!



  • நம்மூரில் நிறைய செல்வம் சேர்த்து, அவற்றை பொத்தி பொத்தி பாதுகாக்கும் நிறைய நபர்களைப் பார்த்திருப்பீர்கள். சேர்த்த செல்வத்தை, தானும் அனுபவிக்காமல் அடுத்தவர்களுக்கும் கொடுக்காமல், அப்படி என்னதான் அவர்களின் எண்ணத்தில் ஓடும் என்றே தெரியவில்லை!

  • போதுமான கல்வியறிவும், அடிப்படைத் தேவைக்குரிய வருவாயும் இருக்கும். செய்துவரும் வேலையை அட்டைபோல் பிடித்துக்கொண்டு பயத்துடனேயே வாழ்க்கையை நடத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும் பார்த்திருப்பீர்கள். கல்வியும், வேலையும் தான் எல்லாமே என்று, ஒரே உடும்பு பிடியாய் வேலையை பிடித்துக்கொண்டு, புதிதாக எந்த ஒரு முயற்சியும் செய்யாத பல நபர்களைப் பார்த்திருப்பீர்கள்.

உண்மையில், உலகத்தில் எல்லோருக்கும் போதுமான அளவு படைக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் மனதில் மட்டும் ஏனோ, எப்போதும் பற்றாக்குறை மனநிலையே நிர்ந்தரமாகிவிட்டது. எங்கே இந்த பணத்தை செலவழித்தால், செல்வத்தை இழந்து விடுவோமோ? இந்த வேலையை இழந்தால் வருமானம் இன்றி கஷ்டப்படுவோமோ? என்று ஒரு வகையான தீவிர சிந்தனையிலும், தீராத பயத்திலும் வாழ்வார்கள். தொடர்ந்து சேமிப்பு குறித்து அதீதமாக தங்களின் குழந்தைகளுக்கு சொல்லி சொல்லி, அவர்களுக்கும் பணத்தின் மீது பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.


இந்த பற்றாக்குறை மனநிலையோடு பயந்து பயந்து வாழ்பவர்களைப் பொறுத்தமட்டில், பெரிய செல்வந்தராவது அதிர்ஷ்டம் சார்ந்த விடயம் என்று எண்ணுவார்கள். தனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லவே இல்லை என்று வருந்துவார்கள்.


பேச்சாளர் சுகிசிவம் ஐயா அவர்கள் சொல்வதுபோல, “தரித்திரம் வேறு; தரித்திர புத்தி வேறு”. பற்றாக்குறை மனநிலை உடையவர்கள் தங்களிடம் செல்வம் இருந்தாலும் அதீத கவனத்துடனும், பாதுகாப்பாகவும் செயல்படுவதாக எண்ணிக் கொண்டு பணத்தை எதற்கும் செலவழிக்காமல் ஏதோ தரித்திரதாரியாகவே வாழ்ந்து விடுவார்கள்.


இவர்களிடம் செல்வம் நிறைய இருக்கின்ற காரணத்தினால், எந்த வகையிலும் தரத்திற்கு சாத்தியமில்லை. ஆனால் அவர்களின் புத்தி பற்றாக்குறையையே முன்னிலைப்படுத்தி, தரித்திர நோக்கிலேயே சிந்திக்கிறது. இந்த மனநிலையை அவர்களாகவே புரிந்து கொண்டு மாற்றினால், தங்களிடமுள்ள போதிய செல்வத்தைக் கொண்டு, பெரும் மகிழ்ச்சியாய் வாழலாம். ஆனால் அப்படி தன்னிலை உணர்ந்து தங்களைத் தாங்களே சரி செய்வார்களா?


  • சேமிப்பு அவசியம்தான். ஆனால் சேமிப்பு மட்டுமே வாழ்க்கையல்ல. நீங்கள் சேர்த்துவைப்பதை இறுதிப்பயனத்தில் கொண்டு செல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தேவைக்குக் கூட செலவு செய்யாமல் இருந்தால் தரித்திர புத்திதானே. இருக்கின்ற செல்வத்தை போதுமான அளவு செலவு செய்து, வாழ்வின் அனுபவங்களை கூட்டிக் கொள்ளுங்கள்;

  • புதிய முயற்சிகளை தொடருங்கள். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் கவனமாக அலசி ஆராய்ந்து முதலீடு செய்யுங்கள். புதிய முதலீடு அவசியமானாலும், உங்களின் எல்லா செல்வத்தையும் ஒரே தட்டில் போட்டு விடாதீர்கள்;

  • நீங்கள் வெற்றி பெற உங்கள் முயற்சி தான் முக்கியம்; “அதிர்ஷ்டம்” இறுதியில் வருவதுதான், முதலில் அல்ல;

  • நீங்கள் மட்டுமே வாழ்வதல்ல சமுதாயம்; இங்கு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் முக்கியம்; நீங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தாண்டி, மற்றவர்களின் பிரச்சனைகளுக்கும் சாதுர்யமாக தீர்வு காணும் திறன் படைத்திருந்தால், அதுவே உங்களுக்கு பெரும் பொருளீட்டும் வாய்ப்பைத் தரும்;

  • எப்போதும் உங்கள் வெற்றியோடு, உங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் நீங்கள் சார்ந்துள்ள சமுதாயத்தின் வெற்றியையும் கணக்கில் கொள்ளுங்கள்; வெற்றி-வெற்றி என்ற கண்ணோட்டத்திலான முயற்சி, சமுதாயத்தில் உங்கள் வாழ்வை மகிழ்ச்சிகரமானதாகவம், மனநிறைவுடையதாகவும் ஆக்கும்;

  • உங்கள் கையில் இருப்பதை கவனத்தோடு கையாண்டு பெருக்குங்கள்; இல்லாதவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படாதீர்கள்;

  • எங்கும், எதிலும், எந்தவொரு சிக்கலிலும், அதை திறம்பட கையாண்டு வெளிவர ஒரு வழியிருக்கும்; அதை தேடும் ஆற்றலையும், பிரச்சனைகள் குறித்த உங்கள் கண்ணோட்டத்தையும் மாற்றிப் பாருங்கள்; எல்லா பிரச்சனைகளுக்கும் புதியதொரு வழிபிறக்கும்;

“இருக்கிறது” என்று பார்த்தால்

எல்லாமே உங்களிடமிருக்கும்;

“இல்லை” என்று பார்த்தால்

எதுவுமே உங்களிடம் இருக்காது;

நேர்மறை எண்ணத்தோடு பயணத்தைத் தொடர்ந்தால்

குழுவோடு சிறப்பாக இயங்கி ஆனந்தமாய் வாழலாம்.


முதலும்-கடைசியுமாக, “எல்லாவற்றுக்கும் நன்றி சொல்லுங்கள்”; கிடைத்தவை-கிடைக்காதவை என்று எல்லாவற்றிற்கும் நன்றி சொல்லுங்கள். ஏனெனில் இவை அனைத்தும் நம் நன்மைக்கே நிகழ்ந்தேருகின்றன;


- [ம.சு.கு 28-10-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page