top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-18 – எல்லாவற்றையும் ஒருவரே அள்ளிக்கொள்ள முயற்சிப்பது சாத்தியமா?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-18

எல்லாவற்றையும் ஒருவரே அள்ளிக்கொள்ள முயற்சிப்பது சாத்தியமா?



  • நீங்கள் விவசாயம் செய்து மக்களுக்கு உணவு வழங்குகிறீர்கள். நீங்கள் ஒருவரே உலகின் எல்லா நிலப்பரப்பையும் விளைவித்துக் உலகைக் சாப்பிடவைக்க முடியுமா? ஒருவேளை உங்களிடம் உலகின் எல்லா நிலத்தைக் கொடுத்தாலும், தனியொருவரால் 10-15 ஏக்கருக்கு மேல் ஒன்றும் செய்ய முடியாதுதானே!!

  • நூற்றுக்கணக்கான புத்தகங்கள் நூலகத்தில் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருசேர எடுத்து ஓரிரவில் படித்துணர முடியுமா? [நீங்கள் ஒன்றும் எந்திரன் சிட்டி இல்லையே] முயற்சிக்கிறேன் என்று நூலகத்தில் உள்ளவற்றை எல்லாம் நீங்கள் ஒருவரே எடுத்துச் சென்று விட்டால், மற்ற மக்கள் என்ன செய்வது?

  • ஒலிம்பிக்கில் நூற்றுக்கணக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. ஒருசிலர் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளில் பங்கேற்று வெற்றி காண்கின்றனர். ஆனால் ஒருவரே எல்லா வகையான போட்டிகளிலும் பங்கேற்று சாதிக்கவேண்டும் என்று நினைப்பது சரியா? அது சாத்தியமா?

தனி மனித ஆற்றல் எல்லையற்றதென்பது உண்மைதான். ஆனால் கொடுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டிற்குள் செய்து முடிக்க வேண்டுமென்றால், நமக்கு இருப்பது இரண்டு கையும், இரண்டு காலும் தானே. நம்மிடம் உள்ளவற்றைக் கொண்டு எதை செய்ய முடியுமோ, அதை மட்டும் தானே அந்த நேர எல்லைக்குள் செய்து முடிக்க முடியும். அதை புரிந்து கொள்ளாமல், எல்லாவற்றையும் செய்கிறேன் என்று நிறைய செய்யத் துவங்கினால், எதையுமே செய்துமுடிக்க முடியாமல் திணற வேண்டியதுதான்.


ஆற்றி ஓடும் எல்லா நீரையும் நான் ஒருவனே பருக வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம் தானே


நம்மால் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் நீர்தான் இயல்பாக பருக முடியும். அதைத் தாண்டி முயற்சித்தால், தேவையின்றி வாந்தி மயக்கம் ஏற்படும்.


சமுதாயத்தில் உங்களுக்குரியதை மட்டுமே நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தவருக்கு கொடுக்கக் கூடாது என்று அபகரிப்பதில்தான் எல்லா பிரச்சினைகளும் தொடங்குகிறது. உலகில் எல்லோருடைய தேவைக்கும் போதுமான அளவு உணவு, உடை இருக்கிறது. ஆனால் மனித இனத்தின் பேராசைக்கு அது போதுவதில்லை. அடுத்தவருக்கு சேர வேண்டியவற்றை நாம் அனுபவிக்க முயற்சிப்பதால், பற்றாக்குறையும், பட்டினியும் ஏற்படுகிறது.


அச்சடிக்கப்பட்ட எல்லா பணமும் என் கஜானாவில்தான் இருக்க வேண்டுமென்று, பணத்தை பூட்டி வைப்பதில் என்ன பயன். காலப் போக்கில் மூடிவைக்கப்பட்ட பணத்தின் மதிப்பு குறைந்து போவது இயற்கை. மாறாய் சேர்த்த செல்வத்தை, வங்கியிலோ, வியாபாரத்திலோ முதலீடு செய்து, வியாபாரத்தை பெருக்கினால், தொழில் வளர்ச்சி எற்படுவதோடு, மக்களுக்கு வேலைவாய்ப்பும், வருவாயும் பெருகும். வியாபாரப் பெருக்கத்தில், நம்முடைய இலாபமும், செல்வமும் பெருகும். சமுதாயத்தோடு பகிர்ந்து வாழப்பழகினால், கட்டாயம் நம் செல்வம் பெருக வாய்ப்பு அதிகம். யாருக்கும் கொடுக்காமல் மூடிவைத்தால், செல்வத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையத்தான் செய்யும்.


உங்கள் வாழ்க்கையில் அனுபவத்தைக் கூட்டி, மகிழ்ச்சியைப் பெருக்க நினைத்தால்,

  • உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக, எல்லாவற்றையும் நீங்களே எடுக்க முயற்சிக்காதீர்கள். வாய்ப்பைப் பயன்படுத்தி, சிறந்தவற்றை போதுமான அளவு மட்டும் எடுத்து பயன்படுத்தி உங்கள் அனுபவத்தை கூட்டிக் கொள்ளுங்கள். போதுமானதை எடுத்துக்கொண்டு மற்றதை மற்றவர்களுக்கு விட்டு வையுங்கள்; எல்லாவற்றையும் நாமே அடைவதைக் காட்டிலும், மற்றவர்களோடு பகிர்ந்தளித்து வாழ்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.

  • எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று ஏற்றுக் கொண்டால், அடுத்து வரும் நல்ல வாய்ப்பை நேர பற்றாக்குறையினால் பயன்படுத்த முடியாமல் போகலாம். எல்லாவற்றிற்கும் “ஆம்” என்று சொல்லி மாட்டிக் கொள்ளாமல், தேவையில்லாதவற்றிற்கு “இல்லை” என்று மறுத்துவிடுங்கள்;

  • நீங்களே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டால், போட்டிக்கு யாரும் இருக்க மாட்டார்கள். போட்டியில்லாவிட்டால் உங்களின் திறன் மேம்பட வாய்ப்பில்லை. சமுதாயத்தில் நிறைய போட்டிகள் இருக்க வேண்டும். போட்டி மனப்பான்மைதான் மனிதன் பல சாதனைகள் நிகழ்த்த உந்து சக்தியாகிறது. போட்டிகள் வளரட்டும், ஆனால் எக்காரணம் கொண்டும் பொறாமை எண்ணம் வளராமல் பார்த்துக்கொள்ளுங்கள்;

  • உலகம் நம் கைகளை விட மிகப் பெரியது. நம்மால் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே கையாள முடியும். எல்லைமீறி முயற்சிப்பது, தனிமனித அமைதியையும், மகிழ்ச்சியையும் தேவையின்று குலைத்துவிடும்;

  • வாழ்வில் நம்முடைய தேவைகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்று இது முற்றிலும் நமக்கு கிடைத்தால் போதும் என்று நினைக்கும் மனம், நாளை வேறொன்றிற்கு ஆசைப்படும். நம் மனதின் தேவைகள் சார்ந்த ஆசையை நிறைவேற்றுவது சாத்தியம். ஆனால் பேராசையின் பின்னால் ஓடினால் மாட்டிக் கொண்டு முழிக்கவேண்டியதுதான்.


உங்களின் தேவைக்கு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்;

உங்களுக்கு உரியதை மட்டும் சேகரியுங்கள்;

ஏனையவற்றை உலகம் உண்டு உய்ய விட்டு வையுங்கள்;

சமத்துவமான சமுதாயம் ஏற்படுத்த முடியாவிட்டாலும்

குறைந்தபட்சம் பட்டினி இல்லாத சமுதாயத்தை

உங்களால் முடிந்தவரை உறுதி செய்யுங்கள்;


- [ம.சு.கு 27-10-2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Kommentare


Post: Blog2 Post
bottom of page