top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-15 – வாசிப்பதற்கு என்ன தயக்கம்?"

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-15

வாசிப்பதற்கு என்ன தயக்கம்?



  • உலகப் பணக்காரர்கள் பட்டியலில் சமீபகாலங்களில் முதல் இடங்களுக்கு வந்துசென்ற எல்லோரும், அதிகமாக புத்தகங்களை வாசிப்பது தங்களின் வழக்கம் என்கின்றனர். ஏன் இவர்கள் பொருளீட்டுவதை விட்டுவிட்டு புத்தகங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்?

  • ஏதேனும் நிகழ்ச்சியில் திடீரென்று நம்மை அழைத்து நம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளச் சொன்னால், நம்முடைய நா வறண்டு விடுகிறது. எல்லோருக்கும் பயன்படும் வகையில் நம்மிடம் சொல்ல ஒன்றும் இல்லை என்றால் நாம் வாழ்ந்து என்ன சாதித்தோம்?

  • பள்ளி, கல்லூரியை முடித்து வெளியே வந்து ஒரு வேலையில் சேர்ந்து பின், நீங்கள் எத்தனை புத்தகங்களை படித்திருக்கிறீர்கள்? தினமும் எத்தனை நிமிடங்களை படிப்பதற்காக ஒதுக்குகிறீர்கள்? கல்லூரியில் படித்து முனைவர் பட்டம் பெற்று விட்டால் அந்தத் துறையில் நீங்கள் நிரந்தர வல்லுநராகி விட முடியுமா?


நான் கடந்த காலங்களில் சந்தித்த எண்ணற்றவர்களிடம் நூல் வாசிப்பு குறித்து கருத்து கேட்டபோது, அவர்கள் தொடர்ந்து வாசிக்காமல் இருக்க எண்ணற்ற காரணங்களைச் சொன்னார்கள். எனக்கு நினைவில் வருவதை இங்கு பட்டியலிடுகிறேன்


  • படிப்பதற்கு நேரம் இல்லை கிட்டதட்ட எல்லோருமே ஒரு ப்ப

  • படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறது கவனம் சீக்கிரத்தில் திசைதிருப்பி விடுகிறது

  • என்ன படிக்க வேண்டும் என்று தெரிவதில்லை பெரிய குழப்பமாக இருக்கிறது

  • இப்போதெல்லாம் புத்தகங்களின் விலை அதிகரித்து விட்டன.

  • ஏனோ இந்த படிக்கும் பழக்கத்தை மட்டும் என்னால் தொடரவே முடியவில்லை

இன்னும் நிறைய சின்ன சின்ன காரணங்கள் பலவற்றை சொல்கிறார்கள் இவை எல்லாவற்றையும் தாண்டி அவர்களின் உண்மையான பதில் இதுவாகத்தான் இருக்க முடியும்


கேள்வி : “ஏன் நூல்களை வாசிப்பது இல்லை?

பதில் :”எனக்கு படிக்க வேண்டுமென்று தோன்றவில்லை


நீங்கள் வாசிக்காமல் இருக்க ஒரே காரணம் உங்களுக்கும் படிக்க வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கவே இல்லை.


  • உங்களுக்கு தொலைக்காட்சியை கண்டுகளிக்க பிடித்திருக்கிறது

  • உங்களின் கைபேசியில் விளையாட பிடித்திருக்கிறது

  • உங்களுக்கு சமூக வலைதளங்களில் உலா வர பிடித்திருக்கிறது

  • காலையிலிருந்து மாலை வரை செய்வதற்கு நிறைய வேலைகளை வைத்துள்ளீர்கள் அதில் புத்தகம் வாசிப்பது பட்டியலில் இல்லை

  • உங்களுக்கு தனிமையில் வாசிப்பதை காட்டிலும் நண்பர்களோடு நேரம் கழிக்க பிடித்திருக்கிறது.

  • மற்றவர்களின் செயல்களில் மூக்கை நுழைத்து உங்கள் நேரத்தை வீணாக்கி விடுகிறார்கள்

நீங்கள் உண்மையில் படிக்காமல் இருக்க ஒரே முக்கிய காரணம் உங்களுக்கு படிக்க தோன்றவில்லை. அவ்வப்போது படிப்பின் அவசியம் குறித்த தெளிவு மனதுக்குள் வந்து போனாலும், அந்த எண்ணங்கள் மனதில் வலுபெருவதில்லை. உங்களின் சிற்றின்பங்கள், அந்த உத்வேகத்தை விழுங்கிவிடுகிறது. இதை மாற்ற என்ன செய்யலாம்? வாரம் ஒரு புத்தகமோ அல்லது மாதம் ஒரு புத்தகமோ படித்து உணர்ந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?


  • தினமும் படிப்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். அந்த நேரத்தில் எதையும், யாரையும் கண்டு கொள்ளாதீர்கள்.

  • 10-20 ஆண்டு அனுபவங்களை, அறிஞர்கள் தங்களின் நூல்களாக வழங்குகின்றனர். அவற்றை நாவலாக படிக்காமல், வாழ்வின் அங்கமாக படியுங்கள். படித்தவற்றின் உட்பொருளை சற்று ஆழ்ந்து சிந்தியுங்கள்.

உங்களின் வாசிப்புத் திறன் அதிகரிக்க ஒரே வழி:

  • நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிப்பைத் தொடருங்கள்;

  • ஓரிரு நாள் தவறினாலும், உடனடியாக வழக்கத்துக்கு திரும்பவந்து விடுங்கள்;

  • எதை வாசிப்பது என்று குழப்பமாக இருந்தால், ஓரிரு நூல்கள் கிடைப்பதை வாசியுங்கள். உங்களுக்கே எது படிக்கவேண்டும் என்ற தெளிவு பிறந்துவிடும்;

  • மறவாமல் தினம் ஒரு திருக்குறள் படியுங்கள்;

வாசியுங்கள்!

உயிர் உள்ளவரை தொடர்ந்து வாசியுங்கள்!

தனிமையின் சிறந்த தோழன் வாசிப்பு;

கிடைக்கும் பொழுதெல்லாம் வாசியுங்கள்;

வாழ்க்கை படிப்படியாய் வசந்தமாகும்!


- [ம.சு.கு - 24.10.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

コメント


Post: Blog2 Post
bottom of page