top of page
 • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-6 – வேலையா? – குடும்பமா? எது முக்கியம்!

Updated: Oct 16, 2022

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-6

வேலையா? குடும்பமா? எதுமுக்கியம்....


 • கடல்கடந்த தேசத்தில், எண்ணற்ற நம் நண்பர்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்து, இங்குள்ள தன் பெண்டு பிள்ளைகளை காப்பாற்றுகின்றனர். 1-2 ஆண்டுக்கு ஒருமுறை வந்து அவர்களைக் கண்டு செல்கின்றனர். ஓரிருவர் வராமலேயே அங்கு இறக்கவும் நேரிடுகிறது.

 • வேலைப்பளுவின் காரணமாக, பலர் அலுவலகத்திலேயே இரவு-பகல் பாராது உழைக்கின்றனர். குடும்பத்தினரோடு உட்கார்ந்து பேச, திரைப்படங்கள், கேளிக்கைகளுக்கு செல்ல நேரமே இருப்பதில்லை. பணம் நிறைய சம்பாதித்தாலும், எல்லோரும் ஒன்றாய் செலவழித்து மகிழ்கிறார்களா?

 • வேலை அதிகம் ஏதுமில்லாமல், வீட்டிலேயே இருப்பவருக்கு கடன்சுமை அதிகரிக்கிறது. ஏதேனும் வெளியூருக்காவது வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டியது தானே என்று மனைவி திட்டுவதும் ஒரு சில குடும்பங்களில் நடக்கிறது. குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்க பொருளீட்ட, அவர்கள் பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.


இந்த வெவ்வேறுபட்ட குடும்பச் சூழ்நிலைகள், உங்கள் ஊரில், உங்கள் தெருவில் எண்ணற்ற குடும்பங்களில் நீங்கள் காணலாம், ஏன்! நீங்களே கூட அயல்நாட்டில் பஞ்சம் பிழைக்கச் சென்று அடிமை வேலை செய்து கொண்டிருக்கலாம்.


 • மனைவி மக்களின் நலனுக்காக, அவர்களைப் பிரிந்து பொருளீட்ட பாடுபட வேண்டுமா?

 • வாழ்கின்ற சில காலத்தை, குடும்பத்தோடு கழிப்பதற்காக பணிகளை அதிகரிக்காமல் கிடைக்கின்ற சிறு வருமானத்தோடு இங்கேயே இருக்கலாமா?

 • நாளுக்குநாள் தேவைகள் அதிகரிக்கின்றன. புதிய பொருட்களை வாங்க வேண்டும். போதிய பொருளீட்டவில்லை என்றால் மனைவியும், மக்களும் உங்களை மதிக்க மாட்டார்கள்.

 • நிறைய பொருளீட்ட, சமுதாயத்தில் நன்மதிப்பை பெற, கால நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் கஞ்சிக்கே கஷ்டம் வந்துவிடுமென்று பயமாக இருக்கிறதா?

இந்த எல்லாச் சூழ்நிலைகளிலும் வேலையா? குடும்பமா ? என்ற கேள்விக்கு நாம் முடிவு காண்பதில் குழப்பமே நீடிக்கிறது. “இதற்கு இதுதான் பதில்” என்று ஒரு நிரந்தர தீர்வு கிடையாது. ஏனெனில் ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட சிக்கலில் இருக்கும்போது எல்லோருக்கும் பொதுவான தீர்வு சாத்தியமில்லை. அதேசமயம் பொருளீட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடு, குடும்பத்தை தொலைத்து நிற்பதும் முட்டாள்தனம். இது நம் எல்லோருக்குமான பொதுவான பிரச்சனை. இதற்கு என்ன செய்யலாம் என்பதும் எல்லோருக்குமான பொதுவான கேள்வி.


எனக்குத் தெரிந்தவரை, நீங்கள்


 • உங்கள் தேவைகளை நெறிப்படுத்துங்கள்;

 • உங்கள் நேரத்தையும், பழக்கவழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள்;

 • பொருளீட்டல் ஆடவனின் கடமை; கட்டியவளையும், பிள்ளைகளையும் கௌரவத்தோடு வாழ வைக்க தேவையான பொருளீட்ட என்ன செய்ய வேண்டுமோ, அதை நியாயமான முறையில் கட்டாயம் செய்யுங்கள்.

 • அளவு கடந்த அன்பையும், அரவணைப்பையும் குடும்பத்தின் இயல்பான நடைமுறையாக்குங்கள்;

அன்பு நிறைந்த குடும்பத்தில், பொருட்களின் மீதான ஆசையும்-மோகமும் இரண்டாம் இடத்தில்தான் இருக்கும். பணத்திற்காக மனிதனை எப்போதும் தூரப்படுத்த மாட்டார்கள். பொருளீட்ட கஷ்டப்படுபவரின் நேரத்தோடு அவர்களும் அனுசரித்துக் கொள்வார்கள்.


வேலையா? குடும்பமா? என்ற கேள்விக்கு

என்னுடைய ஒரே பதில்

அன்பை அதிகரியுங்கள்!

உங்கள் பழக்கவழக்கத்தை ஒழுங்குபடுத்துங்கள்!

படிப்படியாய் - எல்லாம்

சமநிலை அடைந்து மகிழ்ச்சி பெருகும்.


- [ம.சு.கு 15.10.2022]Recent Posts

See All

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 361 - செல்வாக்குடையவர் முக்கியம்!"

நீங்கள் நினைத்ததை சாதிக்க வேண்டுமானால் – ஒன்று நீங்கள் செல்வாக்கு படைத்தவராகவோ அல்லது செல்வாக்குள்ளவரின் முழு ஆதரவுள்ளவராகவோ இருக்கவேண்டும்

Comments


Post: Blog2 Post
bottom of page