top of page
  • Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : "அத்தியாயம்-5 – 100% கிடைக்கவில்லையென்றால் வருந்தாதீர்கள்

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" தொடர் கட்டுரையின் அத்தியாயம்-5

100% கிடைக்கவில்லையென்றால் வருந்தாதீர்கள்....


  • ஒரு மாணவன் கணித பாடத்தேர்வில் 99% மதிப்பெண் எடுத்திருந்தாலும், 1% மதிப்பெண்னை இழந்ததற்காக வருந்திக் கொண்டான். இன்னொரு மாணவன் சரியாக 35% எடுத்து தேற்யதற்காக கொண்டாடிக் கொண்டிருந்தான். இதில் எது வெற்றி!

  • ஊருக்குச் செல்ல தயாராகி பேருந்து நிலையம் செல்கிறோம். தாமதமாக சென்றதால், பேருந்தில் அமர இடம் கிடைக்கவில்லை. நின்று கொண்டே வெகுதூரம் பயணிக்க வேண்டிய நிலை. காலதாமதமாகி வீட்டிலிருந்து கிளம்பியதால் தான் தேவையின்றி கஷ்டப்படுகிறோம் என்று வருந்துகிறோம்.

  • வியாபாரத்தில், இந்த ஆண்டு இத்தனை வர்த்தகம் செய்ய வேண்டும், இவ்வளவு வருவாய் ஈட்ட வேண்டுமென்று திட்டமிடுகிறோம். ஆனால் சிலபல காரணங்களினால், அதில் பாதி இலக்கைத்தான் அந்த ஆண்டு அடையமுடிகிறது. இலக்கை அடைய முடியாமல் போனதற்காக, நாம் அந்த வியாபாரம் செய்ய தகுதியற்றவர் ஆகிவிடுவோமா?


மேற்குறிப்பிட்ட உதாரணங்களில், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அந்த எதிர்பார்ப்புக்கள் எல்லாம் அப்படியே பூர்த்தியானால், மனதிற்கு மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கிறது. ஒருவேளை எதிர்பார்த்தது எதுவுமே நடக்காமல் போனால் அந்த தோல்வியை ஏற்றுக் கொள்வதும், அதே எதிர்பார்ப்பில் பாதி நிறைவேறினால் அந்த முழுமையற்ற நிலையை ஏற்றுக் கொள்ளவும் நம் மனம் பக்குவப்பட்டு உள்ளதா?


  • ஒரு மாணவனுக்கு தேர்வில் தேறியதில் பெருத்த மகிழ்ச்சி. இன்னொருவனுக்கு 100% வரவில்லை என்று வருத்தம். இருவரின் எதிர்பார்ப்பும் வேறுபட்டிருந்தது. அதற்காக 99% வாங்கிய மாணவன் வெறுத்துப்போய் கல்வியை விட்டு விலக நினைத்தாள் முட்டாள்தனம் தானே!

  • பேருந்தில் நமக்கு இருக்கை கிடைக்காவிட்டாலும், நம் சக பயணி ஒருவருக்கு கிடைத்திருக்கிறதே என்று மனம் சமாதானமானால், சமுதாயம் மேன்மைபெரும். நமக்கு இருக்கை இல்லாவிட்டால், ஒரு வேளை வெகுதூரம் பயணமானால், நின்றிருக்கும் இடத்தில் அப்படியே உட்கார்ந்து பயனித்தால் போகிறது. ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட தாமதத்தை எண்ணி வருந்துவதற்கு பதிலாய், கிடைத்ததை ஏற்றுக்கொண்டு ஆகவேண்டியதை கவணிக்கவேண்டியதுதான்.

  • வியாபாரத்தில் 100% இலக்கை அடைய முடியவில்லை என்றால், அது நமது இயலாமை என்றாகிவிடாது. இப்போதைக்கு அடைந்துள்ள வர்த்தக முன்னேற்றத்தை நிலைப்படுத்திக் கொண்டு, அடுத்த கட்டத்துக்கு முன்னேற வழிதேடுவோம். எங்கு தவற விட்டோம்? எதில் அதிக கவனம் தேவை? என்று அலசி ஆராய்ந்து சரிசெய்து, வெற்றி இலக்கை அடைய முயற்சிப்போம். முழுமையாக முடியாவிட்டாலும், இலக்கின் அருகிலாவது அடுத்தமுறை வந்தடைவோம்.


இப்படித்தான் நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும்.

  • நீங்கள் விரும்பியவர் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம்; கிடைத்தவரை விரும்பத் தொடங்குங்கள்!

  • பிள்ளைகள் 100% மதிப்பெண் பெறாவிட்டால், அவர்களுக்க பிடித்த துறை எது என்று கண்டுபிடித்து ஊக்கப்படுத்தி வழிநடத்துங்கள்;

  • வீட்டிற்கு வாங்கிய ஏதாவது பொருள் 100% தரமானதாக இல்லாமல் போகலாம்; அதற்காக காசு கொடுத்து வாங்கியதை தூக்கி வீசவா முடியும்! முடிந்தவரை உபயோகித்து பயன் அடையுங்கள்;


எல்லாவற்றிலும் 100 சதவீதத்தை எதிர்பார்த்திருக்காதீர்கள். நம் வாழ்க்கையில் 100% என்பது அசாத்தியமானது. பல போட்டிகளில், வெற்றிக்கு 100% என்ற இலக்கே கிடையாது. தன் சக போட்டியாளரை விட 1% கூடுதலாக பெற்றாலே வெற்றிதான். தேர்தலில் ஒரு ஓட்டு கூடதலாக பெற்றாலே வெற்றிதான். ஆதலால் கிடைப்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுங்கள். அடுத்த முறை உங்களின் முயற்சியையும், உழைப்பையும் கடுமையாக்கி, வெற்றி சதவிகிதத்தை கூட்டலாம்.


வாழ்வின் இந்த யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு நிம்மதியாய் பயணியுங்கள். வெற்றி நிச்சயம்!


- [ம.சு.கு 14.10.2022]

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 363 - மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்!"

உங்களின் எந்த முயற்சியும் பயனளிக்காமல் மாற்றமுடியாத சூழ்நிலை உருவாணால் மனமொடிந்து நின்றுவிடாதீர்கள்! மாற்றமுடியாததை ஏற்று கடந்து செல்லுங்கள்

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 362 - தவறுகளுக்கு வாய்ப்பில்லாமல் செய்வோம்!"

ஒன்றை செய்ய ஒரே வழி மட்டும் இருக்கட்டும்! பலவழிகள் இருந்தால் தவறுகள் ஏற்படக்கூடும்! ஒரே வழி, ஒரே முறைமை என்றால் தவறுகளுக்கான வாய்ப்பு குறைவு

Post: Blog2 Post
bottom of page