top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தலைமை அவசியம்

கூட்டு முயற்சியும் – யதார்த்தமும்


  • பத்து பேர் சேர்ந்து, ஒரு படகை செலுத்த துடுப்பு போடுகிறார்கள். அவரவர்கள் அமர்ந்துள்ள இடத்திற்கு, திசைக்கும் ஏற்ப தங்களுக்கு வசதிப்பட்ட வண்ணம் துடுப்புப் போடுகிறார்கள். அந்த பத்து நபர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாமல் போனால் படகு என்னவாகும்?


  • ஒரு இசைக்கச்சேரியில், நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஒன்றாக ஒரு குறிப்பிட்ட இசைத்தொகுப்பை வாசிக்க ஆரம்பிக்கிறார்கள். மேலாளர் இல்லாமல் அவர்கள் கையில் இருக்கும் இசைக் குறிப்பை மட்டும் வைத்துக் கொண்டு தங்களின் நேர அனுமானங்களின் அடிப்படையில் வாசிக்கத் தொடங்கினால், அந்தப் பாடலின் இசைக்கோர்வை எப்படி இருக்கும்?


ஆம் !!

கூட்டாக செய்ய வேண்டிய வேலைகளுக்கு, அந்த கூட்டு முயற்சியை நிர்வகிக்க ஒரு மேலாளர் இருந்து, அதன் போக்கை ஒரு கோர்வையாக சேர்க்கவில்லை என்றால், அந்தப் கூட்டுமுயற்சியில் பல குளறுபடிகள் ஏற்படும். காரணம் யாதெனில், ஒவ்வொருவரும் தங்களுக்கென்று வெவ்வேறு அனுமானங்களை கொண்டிருப்பார்கள். இசைக்குழுவில் இந்த கருவியை இந்த நொடியில் துவங்க வேண்டும் என்று அமைக்கப்பட்டிருந்தால், அதற்கு ஒரு வினாடி முன்பின் ஒரு கருவி துவங்கினாலும், அந்த இசைக்கோர்வை பாழ்பட்டுவிடுகிறது..


வீரர்களை வழிநடத்த வேண்டும்


இது விளையாட்டு, இசை மட்டுமென்றில்லை. பெரிய போர்களை நடத்த முற்பட்டாலும், ஒவ்வொரு படைக்கும் அதனுள் உள்ள ஒவ்வொரு சிறிய குழுக்களுக்கும், தனித்தனியே தலைவர்கள் நியமித்து அந்தப் படையை ஒருவர் தலைமை ஏற்று வழி நடத்தினால் தான் போரில் வெற்றி பெற இயலும். அதைவிடுத்து வீரர்கள் தங்கள் இஷ்டம் போல் போர் செய்யலாம் என்று விட்டால், எதிரியின் வியூகங்களில் எளிதில் மாட்டிக் கொள்வார்கள். பின் இழப்புக்கள் அதிகரித்துவிடும்.


தலைமை – ஏகாதிபத்திய முறையா ?


இப்படி குழுவை வழிநடத்த தலைமை முக்கியம் என்று சொன்னாலும், ஒரு சாரார் அது ஒரு ஏகாதிபத்திய முறை என்றும், குழுக்களை வழிநடத்த இன்றைய காலகட்டங்களில் தலைவர்கள் தேவையில்லை என்று விதண்டாவாதம் பேசத்தான் செய்கிறார்கள். ஒருவர் தனியாக செயல்களைச் செய்து சாதிக்க யாரும் வழிநடத்த தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் இருவர் சேர்ந்து செய்தாலே, அவர்களில் ஒருவர் பொறுப்பெடுத்து அவர்களுள் யார், எதை, எப்போது, செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு செய்தால் தான் அந்த செயலை சிறப்பாக செய்ய முடியும். இருவரும் தங்கள் இஷ்டம் போல் செயல்பட்டால், அடைய வேண்டிய இலக்கு அன்னியப்பட்டுவிடும்.


இன்றைய காலகட்டத்தில், தலைமையேற்று வழி நடத்துவது என்பது ஒரு ஏகாதிபத்திய முறையல்ல. அது குழுவின் வெற்றிக்கு வழி நடத்தத் தேவையான அத்தியாவசிய ஒன்று. இதில் யாரும், யாருக்கும் அடிமைகள் அல்ல. ஒரு குறிப்பிட்ட பணியை செய்ய, அவரவர்கள் தங்களின் எண்ணம்போல் செயல்படாமல் ஒரே குறிக்கோளுடன், முறைமை தவறாமல் கோர்வையாக எல்லோரும் செயல்பட, ஒருவர் முன்னின்று, இன்னார், இன்னின்ன செய்ய வேண்டும் என்று வழி நடத்தவே தலைமை மிக அவசியமாகிறது. அந்த மேலாண்மையை செய்ய ஏற்ற தலைமை இல்லாவிட்டால், அந்தப் பணி நிறைவேறுவது மிகவும் சிரமமாகிவிடும்.


எல்லா மட்டத்திலும் – தலைமை தேவை



ஒரு வீடு, ஒரு ஊர், ஒரு மாநிலம், ஒரு நாடு என்று எந்த வட்டத்திற்கும் அதற்குரிய குறிக்கோள்களை வகுத்து, அதற்குத் தேவையான பொருளை ஈட்டி, ஈட்டிய பொருளைத் தேவைக்கேற்ப வகுத்து செலவழித்து, வாழ்வில் முன்னேற தலைமை எல்லாவிடத்திலும், எல்லா மட்டத்திலும் தேவைப்படுகிறது. தேசம் தொடங்கி நமது தெரு, நமது வீடுவரை, யாரேனும ஒருவர் தலைமையேற்று வழிநடத்தினால் தான் வாழ்க்கை செம்மையாகும்.


ஒரு நல்ல தலைவன் !

எந்த செயலை சீக்கிரமாக துவக்க வேண்டும்;

எதை சீக்கிரமாக செய்துமுடிக்க வேண்டும்;

எந்த செயலை தாமதப்படுத்த வேண்டும்;

எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்

என்பதை ஆய்ந்தறிந்து வழிநடத்திச் செல்வான்;


நீங்கள் மிகப்பெரிய சாதனைகளைச் செய்யவும் வெற்றிகளை அடையவும், ஒரு குழுவின் உதவி தேவை. அந்த குழுவை வழிநடத்தும் தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொண்டால்தான் வெற்றிகளை உறுதி செய்ய முடியும்.

சாதாரண வெற்றிகளை அடைய

நீங்கள் தனித்து இயங்கினாலே போதுமானதாகலாம்;

அசாதாரண செயல்களைச் செய்ய, சாதனை படைக்க

ஒரு குழுவின் கூட்டு முயற்சி தேவை;

அந்த குழுவை ஒருங்கிணைத்து வழிநடத்து

ஒரு தலைவன் அத்தியாவசியத் தேவை !!


முட்டாள்தனத்தை சரிசெய்ய தலைமை வேண்டும்


சீக்கிரத்தில் பூமியன் மக்கள்தொகை ஆயிரம் கோடியை தாண்டிவிடும். ஆனால் அத்துனை நபர்களுள், தலைவர்களுக்கு தொடர்ந்து பஞ்சம். நல்ல தலைவர்களுக்காக உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. மனிதராய்ப் பிறந்த எல்லோரும் அறிவாளிகள் தான். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் எண்ணற்றவர்கள் முட்டாள் தனமாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். எல்லோரையும் அரவணைத்து வழிநடத்த எப்போதும் ஒரு தலைமை தேவைப்படுகிறது. அன்றாட வாழ்க்கை நடத்துவது தொடங்கி அரிய சாதனைகள் படைக்கும் வரை எல்லாவற்றிற்கும் நல்ல தலைமை வழிவகுக்கும்.


நேர்மையான தலைவன் - பல புதிய தலைவர்களை உருவாக்குவான்;

நேர்மையற்றவன் - வெறும் தொண்டர்களை மட்டும் பெருக்குவான்;

நீ தலைவனாவதும், தொண்டனாகவே நீடிப்பதும்,

யார் முன்னே நீ நின்றாய் என்பதில் நிர்ணயமாகும்;



[ம.சு.கு - 23-03-2022]







10 views0 comments

Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page