top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : கடைசி 10 நிமிடங்கள் [துவங்குவதற்கு முன்]

பள்ளிக்குழந்தைகள் சிலரின் பேச்சுப்போட்டி பங்கெடுப்புக்களை கவனித்திருக்கிறீர்களா? கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில் சிறந்த உரையை நிகழ்த்த வேண்டும் என்ற ஆசையுடன், தன் ஆசிரியர்-பெற்றோர் உதவியுடன், ஒரு உரையை தயார் செய்து, நன்கு மனனம் செய்து, தங்கள் ஆசிரியரிடமும், பெற்றோரிடமும், நண்பர்களிடமும், பலமுறையும் ஒப்புவித்து தயாராக வைத்திருப்பார்கள்.


குழந்தைகளின் கடைசி நிமிட பயம்


ஆனால் போட்டியின் போது மேடையில் பேச துவங்கும்போது, தடுமாற்றம் ஏற்பட்டு, பேச வேண்டியவற்றை மறந்து மிகவும் திக்கிக்கொண்டு அல்லல் படுவர். உடலெல்லாம் வியர்த்து, ஏதோ போர்முனையில் எதிரியின் டாங்கியின் முன்னால் நிற்பது போன்று பயந்து, வெளிரிப்போய், அந்த ஐந்து நிமிடங்களை கடந்து கீழே இறங்குவார்கள். கடினமாக பயிற்சி செய்த மாணவர்கள், ஏன் அந்த குறித்த தருணத்தில் உரை நிகழ்த்தத் தவறுகிறார்கள்?


விவரிப்பதிலும்-கேட்பதிலும் மறதி & பயம்


இந்த மேடைப்பேச்சு பயம் மாணவர்களுக்கு என்று மட்டுமில்லை, நம்மில் பல பெரியவர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது. ஏன் இந்த பயம் கடைசி நிமிடங்களில் தொற்றிக்கொள்கிறது. இது மேடைப்பேச்சு அல்லாமல் புதிய வாடிக்கையாளரிடம் பொருட்களை விவரிப்பதிலும் இப்படிப்பட்ட சிக்கல்கள் பலருக்கு வருகின்றன.


சில சமயங்களில், சில குறிப்பிட்ட நபர்களை சந்திக்கும் போது, இன்ன கேள்விகளை கேட்டறிய வேண்டும் என்று எண்ணி வைத்திருப்பார்கள். ஆனால் உரையாடலின் போது சிலவற்றை மறந்து விடுவார்கள். எல்லாம் முடிந்து, அவர் சென்ற பின்னர், ஐயோ! இதை கேட்காமல் விட்டுவிட்டேனே என்று வருந்துவார்கள். இந்த கடைசி நிமிட பயம், மறதி என்பன எல்லாம் யதார்த்தத்தில் தவிர்க்கப்பட வேண்டிய மன உளைச்சல்களே.


ஏன் வெற்றிவாய்ப்புக்ளை இழக்கிறோம்


இப்படி எண்ணற்ற இக்கட்டான சூழ்நிலைகள், நமக்கு பல விதங்களில் அன்றாடம் வந்துபோகின்றன. யதார்த்தத்தில், இந்த இக்கட்டான சூழ்நிலைகளை திறம்பட கையாளாததனால், பல வெற்றி வாய்ப்புகளை இழந்து இருக்கிறோம். ஏன் இந்த கடைசி நிமிட படபடப்பு? பயம்? இதை எப்படி கையாண்டு வெற்றி கொள்வதென்று நம்மில் எத்தனை பேர் ஆக்கப்பூர்வமாக சிந்தித்துப் படிப்படியாக மாற்றங்களை ஏற்படுத்தி வெற்றி அடைந்திருக்கிறோம்?


பயம்-பயம்-பயம்


ஆனால் இந்த கடைசி நிமிட பயத்தை கண்டு பயந்து பயந்து பல முயற்சிகளை தவிப்பவர்களும் எண்ணற்றனர் உளர்.


பயத்தினால் பயம்

பயத்தைக்கண்டு பயம்

பயமில்லாத பயம்


இந்தத் தேவையற்ற பயத்தைப் பற்றி தனிமையில் ஒருநாள் சிந்தித்துப் பாருங்கள். உங்களுக்கே சிரிப்பாக இருக்கும்.


உச்சகட்ட பயம்


இப்படி பயத்தைப் பற்றியே பேசி, மேலும் பயப்பட வேண்டாம். இந்தக் கடைசி நேர பயம் என்பது போட்டியில் நீங்கள் சாதிக்கப் போவதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன்னர்தான் உச்சமடையும். அதிலும் நீங்கள் முதல் போட்டியாளராக இல்லாமல், பின்வரிசையில் அழைக்கப்படும் போது இந்த பயம் உச்சகட்டத்தை தொடும். எப்படி இந்த கடைசி 5-10 நிமிட உச்சகட்ட பயத்தை போக்குவது?

திறமை குறைவினால் வரும் பயம் என்றால்,

  • அதற்கு ஒரே வழி பயிற்சி தான்.

  • தினம்தினம் பயிற்சி செய்து, திறமைகளை வளர்த்து பயத்தை ஒழிக்க வேண்டும்.

அதே சமயம், போதிய திறமையிருந்தும் கடைசி நேரத்தில் ஏற்படும் படபடப்பும், அதைத் தொடர்ந்து ஏற்படும் தாழ்வுமனப்பான்மையும், பயமும் சரியான அணுகுமுறையினால் சரி செய்யப்பட வேண்டிய ஒரு வித மனநல பிரச்சனையாகும். ஆம் இதுவொரு மனநலப் பிரச்சனையே....


கடைசி நிமிட பயத்தை எதிர்கொள்ளுதல்


எப்படி இந்த கடைசி 5-10 நிமிட படபடப்பை, பயத்தை எதிர்கொள்வதென்பது, நாம் எதிர்கொண்டிருக்கும் போட்டியின் காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் தேர்வு செய்து கொள்ள வேண்டிய ஒரு வழிமுறையே. அந்த கடைசி தருணங்களில், வெவ்வேறு சூழ்நிலைகளில் கையாளப்பட வேண்டிய ஒரு சில அணுகுமுறைகளை நான் அறிந்த வரை இங்கு பட்டியலிடுகிறேன்.

  • எந்தச் சூழ்நிலையானாலும், கடைசி 2-3 நிமிட நேர அமைதியும், தியானமும், சுவாசப்பயிற்சியும், மிகுந்த மன அமைதியைத் தரும்.


  • பள்ளித் தேர்வுகளுக்கு செல்பவர்கள், கடைசி 5 - 10 நிமிடங்களில் எவற்றையெல்லாம் மறுமுறை வாசிக்க வேண்டும் என்ற குறிப்பை முன்னரே தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். (உத: கணிதப் பாடத்தில் தேவையான சூத்திரங்கள், வேதியலுக்கு தேவையான ரசாயன குறியீடுகள் மற்றும் சூத்திரங்கள் என்று பாடங்களைப் படிக்கும் போதே சிறு குறிப்புகளை எடுத்து வைத்தால் கடைசி நிமிடங்களில் மிகுந்த பலன் தரும்.


  • பேச்சுப் போட்டிக்கு மூச்சுப் பயிற்சியும், தியானமும் கடைசி நிமிட அத்தியாவசிய தேவை. மேலும் நம்முடைய மனதில் தன்னம்பிக்கை தரும் வாசகங்களையும், நம்மால் முடியும் என்கிற சொற்களை தொடர்ந்து கூறி, நம் மனதை முழுவதும் வசியப்படுத்த வேண்டும்.


  • நேர்காணல்களுக்கும், தெளிவுரை பெறுவதற்கும் செல்பவர்கள், தங்களுக்குத் தேவையான கேள்விகளை தொகுத்து எழுதிவைத்திக் கொள்வது மிக முக்கியம்.


  • உங்களின் சக குழு உறுப்பினரை ஊக்கப்படுத்துவதன் மூலம், உங்களுக்குள்ளே ஏற்படும் தன்னம்பிக்கையும் உத்வேகமும் தானாகவே உங்களை வழிநடத்தும்.


  • மற்ற போட்டியாளர்களையும், போட்டியின் நடுவகர்களையும் சில நிமிடங்கள் கூர்ந்து கவனித்தால், சூழ்நிலையை எப்படிக் கையாள வேண்டும் என்ற யோசனைகள் கட்டாயம் நமக்கே தோன்றும்.


கடைசி நிமிட புத்தம்புது முயற்சிகள்


பல தருணங்களில், மற்ற போட்டியாளர்களின் செயல்பாடுகளை கவனிப்பதன் மூலம், பல புதிய வழிமுறைகள் பற்றிய யோசனைகள் கடைசி நிமிடங்களில் வரும். என் அனுபவத்தில் உணர்ந்தது, கடைசி நிமிடத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.


நீங்கள் கைதேர்ந்தவரான பின், கடைசி நேர புதிய முயற்சிகளைப் பற்றி யோசிக்கலாம். ஆரம்ப காலங்களில் நன்கு பயிற்சி செய்த விடயங்களையும், முறைகளையும் மட்டும் திறம்பட செயல்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.


மறந்துவிடாதீர்கள் !!


நமக்கு நம்மை நிரூபிக்க நல்ல வாய்ப்புக்கள் சில முறைதான் கிடைக்கும்:


அந்த வாய்ப்புகள் வரும்போது, அதை திறம்பட கையாள்வதில்தான் நமது உண்மையான திறமை இருக்கிறது:


போட்டிக்கு முந்தைய கடைசி பத்து நிமிடங்கள் முத்தான தருணங்கள்;


உங்களை நீங்களே தயார் செய்து கொள்வதற்கும் ஒழுங்குப்படுத்துவதற்கும் ஏற்ற தருணம்;


கடைசி பத்து நிமிடங்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி வெற்றி பெறுவோம்:


- [ம.சு.கு – 09-02-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page