top of page
Writer's pictureம.சு.கு

[ம.சு.கு]வின் : தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கிறோம்

ஏன் நம்பிக்கையிழந்து திரிகிறோம்


“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது”


எனும் ஒளவையின் வரிகளை அறியாதார் இல்லை.


ஆனால் இந்த மானிடப் பிறப்பின் மகத்துவத்தை உணர்ந்து, அதை சரிவர செயற்படுத்தாதவர்கள் ஏராளம். ஆயிரமாயிரம் தன்னம்பிக்கை ஊட்டும் வார்த்தைகளை அன்றாடம் கேட்கிறோம். ஆனால் அதனினும் அதிகமாய் எதிர்மறை வார்த்தைகளும், நிகழ்வுகளும் நம் கண்முன்னே நிகழ்ந்தேறுவதால், நம்பிக்கையற்றவர்களாய் காலம் கடத்துகிறோம்.


படைப்பில் ஏற்றத்தாழ்வுகளா?


ஒரு சிலர் ‘ஆண்டவன் தன்னை இப்படி படைத்து அலைய விட்டு விட்டானே?’ என்று இறைவனைக் கடிந்துகொள்கின்றனர். இறைவன் படைப்பில் எல்லாம் சமம் தான்.


ஆம்! நீயும் நானும் சமம்தான். ஏன் மாற்றுத்திறனாளிகளால் பிறந்தவர்களும் சமம்தான். மேம்பட்ட ஆன்மநிலையில் உள்ளவர்கள், உயிருள்ள-உயிரற்ற பொருட்கள் என்று எல்லாமே இறைவனுக்கு சமம்தான் என்பதை உணர்கிறார்கள்.


“சிந்தித்தால்” - சிந்தனைதான் சிறந்தது


ஏனையவற்றை எல்லாம் ஐந்தறிவிற்கு கீழாய் படைத்த இறைவன், மனிதனுக்கு மட்டும் சிந்தனை எனும் பேராற்றலான ஆறாவது அறிவை கொடுத்திருக்கின்றான். உணவு, உடை, உறைவிடம் என்னும் அத்தியாவசிய தேவைகளை தாண்டி, அறம், பொருள், இன்பம் எனும் மூன்றிலும் மேன்மையடைய வழிவகுப்பது இந்த சிந்தனைத்திறனே.


‘சிந்தனை திறன்’ என்னவென்று

புரிந்தவர்கள், மேலே செல்கிறார்கள்.

புரியாதவர்கள் கீழே செல்கிறார்கள்.


உங்களால் சிந்திக்க முடிந்தால், உங்களிடம் எல்லா திறமைகளும் இருக்கிறதென்று பொருள். ஏனெனில் சிந்தனை தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரமும்-முடிவுமாகும்.


ஏன் இவற்றை நாம் சிந்திக்கவில்லை


ஏதோ கட்டுரைக்காக நான் வெறுமனே சிந்தனை பற்றி புகழ்ந்துரைக்கிறேன் என்றெண்ண வேண்டாம். உங்களுக்குத் தெரிந்த வெற்றியாளர்களை பாருங்கள். உலகப் புகழ் பெற்றவர்களின் சுயசரிதையை படியுங்கள். அவர்களிடம் பொதுவாக இருக்கும் என்னற்ற குணாதியங்களில் சில குறிப்பிட்டவற்றை எடுத்துப்பார்ப்போம்?


நேர-மேலாண்மை

எல்லோருக்கும்  24 மணி நேரம்தான்.
சிந்திப்பவர்கள்   நேரத்தை பொன்னாக்குகிறார்கள்.
நீங்கள்   ஏன் மண்ணாக்குகிறீர்கள்?

சுயகட்டுப்பாடு - சுயஒழுக்கம்

தினந்தோறும்   குறித்த நேரத்தில் குறித்தவற்றைச் செய்வது, இன்னவற்றை தவிர்ப்பது என்று செய்ய வேண்டியவைகளை எல்லோராலும்   கட்டுப்பாட்டுடன் செய்ய இயலும்.
வெற்றியாளர்கள்   செய்கிறார்கள்;
நீங்கள்   ஏன் செய்வதில்லை?

பயிற்சி

புதியவைகளில்   வெற்றி பெற,
அது   நமக்கு பழகவேண்டும்;
பழகப்   பழகத்தான் அது கைகூடும்;
வெற்றியாளர்கள்   சோம்பலை கடந்து தினமும் பயிற்சிக்கிறார்கள்;
அவர்களால்   பயிற்சி செய்ய முடிகிறது;
உங்களால்   ஏன் முடியவில்லை?

செய்தல்

பேச்சைக்   குறைத்து செயலில் கவனம் செலுத்து என்று எல்லோரும் சொல்கின்றனர்.
பேசிப்   பேசிப் பொழுதைக் கழிக்காமல் பேச வேண்டியவற்றை எல்லாம் செயலால் வெற்றியாளர்கள்   நிரூபிக்கிறார்கள்.
நீங்கள்   ஏன் இன்னும் துவங்காமலே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்?

கற்றல்:-

எல்லோருக்கும்   எல்லாமும் தெரியாது என்பது அனைவரும் அறிவர்.
அவரவர்   தேவைக்கேற்ப வாசித்து தங்கள் அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்.
வெற்றியாளர்கள்   தொடர்ந்து வாசிக்கிறார்கள்.
நீங்கள்   எத்தனை நூல்களை வாசித்தீர்கள்?

செயல்படுத்துவதில்தான் வேறுபாடு


இப்படி எல்லா மனிதர்களிடமும் எல்லா ஆக்கப்பூர்வமான குணாதிசயங்கள் இருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில்தான் மனிதர்களுக்கு இடையே எத்தனை வேறுபாடுகள். சரியாக சிந்தித்து செயல்படுபவர்கள், ஒவ்வொன்றாய் சரி செய்து முன்னேறுகிறார்கள். ஆக்கப்பூர்வமான சிந்தனையற்றவர்கள், சுயநலவாதிகளின் தவறான வழிநடத்தலில் சிக்கி தங்களை அவர்களின் அடிமைகளாகவே காலம் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.


உங்களால் முடியும்


அளப்பறிய மனித ஆற்றலின் செயல்பாடு எல்லோர்க்கும் சாத்தியமே. ‘சிந்தனை வளத்தால், ஆற்றலை கவனத்துடன் வளர்த்தால்’ நம்முடைய ஆக்கப்பூர்வமான குணநலன்களே, நம்மை வெற்றிப் பாதையில் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லும்.


மேற்குறிப்பிட்ட குணாதிசயங்களுடன், உங்களின் வெற்றிக்கு தேவையான வேறு சில பொதுவான குணநலன்கள்:-


நினைவாற்றல்:-


எல்லோருக்கும் பொதுவானது. எல்லோரிடமும் இருப்பது. கவனத்துடன் படித்தால் நினைவில் ஏறும். நினைவில் ஏறியவைகளை நினைவுகூறுவது சாத்தியமே.....


இனியவை கூறல்:-


நல்லதோ - கெட்டதோ, அதைச் சொல்ல இனிமையான வார்த்தைகள் நிறைய இருக்கின்றன. கடுமையான வார்த்தைகள் உறவுகளை பாதிக்கும். எந்த இடத்தில் எப்படிபட்ட வார்த்தைகளை உபயோகிக்க வேண்டுமென்பது நமது தேர்வுதான்...


மேலும் திட்டமிட்டு செயல்படுதல், குழுவை அரவணைத்து வழிநடத்துதல், வாடிக்கையாளர் சேவை, விடாமுயற்சி, என்று சிந்தித்து செயலாற்ற வேண்டிய செயல்பாடுகள் எண்ணற்றவை இருக்கின்றன. இவை அனைத்தும் எல்லோருக்கும் சாத்தியமான ஒன்றுதான்.


சாதிப்பதற்கு ஆயிரம் விடயங்கள் இருப்பதும், சிந்தனைதான் எல்லாவற்றின் துவக்கம் என்று அறிந்திருந்தும், தூங்குவது போல நடித்துக் கொண்டிருந்தால், எப்படி இவற்றை நீங்கள் சாத்தியப்படுத்துவது.


மறந்துவிடாதீர்கள்


விழுமின்! எழுமின்! என்னும் வீரத்துறவியின் வார்த்தைகளை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான்...


"செயல்படு

தொடர்ந்து செயல்படு

சிந்தித்து செயல்படு

ஆக்கப்பூர்வமாக அண்டத்தை வழிநடத்த

உன்னால் முடியும் என்று செயல்படு"


- [ம.சு.கு – 23-02-2022]



Recent Posts

See All

“[ம.சு.கு]வின் : சிறிய மீன்கள் - கவனச்சிதறல்களா?" - முடிவுரை

பணத்தின் பின்னால் ஓடுங்கள் போதுமான அளவு சேர்க்கும்வரை மட்டும்! எது எல்லை என்ற அளவில்லாம் ஓடினால் திரும்பிவர பாதையே இருக்காது!

[ம.சு.கு]வின் : "அத்தியாயம் 364 - சாவதற்குள் அனுபவியுங்கள் …!"

செல்வம் பலகோடி சேர்த்து கல்லாப்பெட்டியில் பூட்டிப்பூட்டி வைத்திருந்தால் அதனால் உங்களுக்கென்ன இலாபம்? சாகும்போது அதை கொண்டாபோகப்போகிறீர்கள்

Comments


Post: Blog2 Post
bottom of page